மிதுனத்திற்கு இடம் பெயரும் செவ்வாய் - யார் யாருக்கு பணம் வரும்? யாருக்கு வேலை கிடைக்கும்?

Published : Mar 11, 2023, 01:57 PM IST

மங்களகாரகனான செவ்வாய் பகவான் வரும் 13 ஆம் தேதி காலை 5.33 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 

PREV
113
மிதுனத்திற்கு இடம் பெயரும் செவ்வாய் - யார் யாருக்கு பணம் வரும்? யாருக்கு வேலை கிடைக்கும்?
செவ்வாய் பகவான் இடப் பெயர்ச்சி 2023

மங்களகாரகனான செவ்வாய் பகவான் வரும் 13 ஆம் தேதி காலை 5.33 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு பொற்காலம் உண்டாகும். இந்த செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்ன பலனைத் தரும்? யாருக்கு வேலை கிடைக்கும்? யார் யாருக்கு காசு, பணம் கொட்டும் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க...
 

213
மேஷம்:

எடுத்த காரியங்களில் முயற்சி கிட்டும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வேலை தேடுவோருக்கு புதிதாக வேலை கிடைக்கும். மறைமுக வருமானம் வரும் காலகட்டம் இது.
 

313
ரிஷபம்:

முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். பணம், நகை ஆகியவற்றை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உறவுகளுக்கிடையில் நிதானமாக பேச வேண்டும்.
 

413
மிதுனம்:

கோபம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அலுவலகத்தில் இருப்பவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.

513
கடகம்:

உங்களது ராசிக்கு செவ்வாய் பகவான் 12ஆவது இடமான மறைவு ஸ்தானத்திற்கு வந்து மறைகிறார். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உடல்நல பிரச்சனை வர வாய்ப்புண்டு.
 

613
சிம்மம்:

வருமானம் இரட்டிப்பாகும். சொத்து தொடர்பான வழக்குகள், பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி உறவில் உற்சாகம் உண்டாகும்.

713
கன்னி:

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். எந்த முடிவையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுப்பது நல்லது. நல்ல வேலை கிடைக்கும்.

813
துலாம்:

சாகச பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். வாழ்க்கை வசந்தமாகும். அதிர்ஷ்டம் தேடி வரும் அற்புதமான காலகட்டம். கையிருப்பு கரையும்.

913
விருச்சிகம்:

மின் சாதனங்களில் எச்சரியாக இருக்க வேண்டும். பயணங்களில் கவனம் தேவை. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

1013
தனுசு:

பண பலம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மற்றவர்களால் எரிச்சல் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவுகள் உண்டாகும்.

1113
மகரம்:

வங்கிக் கடனுக்கு முயற்சி செய்வீர்கள். மற்றவர்களிடம் கடன் வாங்குவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும்.

1213
கும்பம்:

இந்த ராசிக்கார மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நன்றாக இருக்கும். காதலருடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும்.

1313
மீனம்:

உங்களது கவனக்குறைவால் பெரிய அளவில் இழப்பை சந்திக்க நேரிடலாம். நிலம் மற்றும் சொத்து தொடர்பான வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories