டெய்லி காலையில கருட தரிசனம் செய்தால் போதும்! - ஏகபோக ராஜயோகம்தான்!

First Published | Mar 13, 2023, 3:32 PM IST

நமக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு அளிக்கும் கருட தரிசனம் குறித்து இங்கு பார்ப்போம். எந்தெந்த கிழமையில் கருட தரிசனம் செய்தால் என்ன பிரச்சனையை ஓடோட விரட்டலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

எல்லா நாட்களிலும், அதிகாலை சூரியன் உதிக்கும் போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

ஞாயிற்று கிழமை

ஞாயிற்று கிழமை நாளில் கருட தரிசனம் செய்து வந்தால் சர்வ நோய்களும் குணமாகும். உடல்நலன் மற்றும் மன ஆரோக்கியத்தை தரும். பிதுர் சாபம், பிதுர் துரோகம் போன்ற கொடிய தோஷங்கள் விலக ஞாயிற்றுக்கிழமைகளில் கருட தரிசனம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
 

திங்கள் கிழமை

உங்கள் ஜாதகத்தில் சந்திரபலம் பெறவும், சந்திரகிரக தோஷ நிவர்த்தி பெற்று சுபிட்சம் பெறவும், மாதுர் தோஷம், சாபம் போன்றவைகள் நீங்க திங்கட்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும். கடக ராசி மற்றும் கடக லக்னகாரர்கள், திங்கட்கிழமை தோறும் கருட தரிசனம் செய்துவர வாழ்வில் நல்ல வளம் பெறலாம்.

Latest Videos


செவ்வாய் கிழமை

நிலம் வாங்குதல், வீடு, மனைகள் போன்றவற்றில் குறைகள் இருந்தாலோ அல்லது அவை சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து நிவர்த்தி அடைய செவ்வாய் கிழமை அன்று கருட தரிசனம் செய்துவர நல்ல பலன் தரும்.

செவ்வாய் அதிபதியாக கொண்ட ராசி, லக்னம், மற்றும் நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் கிழமைகள் தோறும் ஓரையில் பிறந்தவர்கள் கருட தரிசனம் செய்வது வாழ்வில் பெரிய நிலையை அடைய வழி வகுக்கும். இவர்கள் தொடர்ந்து வழிபட வாழ்வில் ஏற்படும் அனைத்துவித துன்பங்களும், துயரங்களும் நீங்கி, சுபிட்சம் பெறலாம்.
 

புதன் கிழமை

அறிவு கிரகமான புதன் கிரகம், கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாக பார்க்கப்படுகிறார். புதன் கிழமை தோறும் கருடனை வழிபட்டு வர பத்திரம் மற்றும் பதிவுத்துறை சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். கல்விகளில் ஏற்படும் தடைகள், தோல்விகள் நீங்கி, வெற்றிகள் ஏற்படவும் புதன் கிழமைகளில் கருட தரிசனம் செய்யலாம்.

புதன் கிரகத்தை ராசி மற்றும் லக்ன அதிபதியாக கொண்டவர்களும், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் புதன் கிழமை கருட தரிசனம் செய்தால் வாழ்வில் நல்ல உயர்வு கிட்டும்.

வியாழக்கிழமை

வாழ்வில் ஏற்படும் சகலவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது வியாழ கிழமை மாலை நேர கருட தரிசனம். குரு வார கருட தரிசனத்தால் எடுத்த காரியம் நிறைவேறும். பணவரவு, சத்ரு ஜெயம், தேர்வுகளில் வெற்றி போன்றவைக் கிட்டுவது உறுதி. மேலும், புத்திரப்பேறு வேண்டுவோர் வியாழக்கிழமை கருட தரிசன செய்து வரலாம்.

வெள்ளி கிழமை

வெள்ளி கிழமை கருட தரிசனம் செய்ய, நோய், கடன், எதிரிகளின் சாபம், தொல்லைகள் நீங்க வழி பிறக்கும். கொடுத்த கடன் தொகைகள் திரும்பி வரும். சுக்கிர பகவான், ஒருவருடைய ஜாதகத்தில் 6, 8, 12-ம் இடங்களில் இருந்தாலும், நீச்ச நிலை, அஸ்தமனம், வக்கிரம், பாதகம் நிலையில் இருந்தாலும், வெள்ளி கிழமை கருட தரிசனம் சுக்கிர கிரக சாந்திக்கு வழிவகை செய்யும்.

சுக்கிரனின் ரிஷப, துலா ராசி, லக்ன காரர்கள், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுக்கிர வார வெள்ளிக்கிழமை கருட தரிசனம் செய்து வர வாழ்வில் முன்னேற்றத்தை பெறலாம்.

சனிக்கிழமை

வேலைக்காரர்கள், கடின உழைப்பாளிகள், வியர்வை சிந்த உழைப்பவர்கள், சனி வார கருட தரிசனம் செய்வதால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள்.

மேலும் சனி பகவான், ஜாதகத்தில் 6, 8, 12-ம் இடங்களில் இருந்தாலும், நீச்சம், பகை, அஸ்தமனம், வக்கிரம், செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்றவைகளின் கிரக தொடர்புகள் பெற்று இருந்தாலும், சனி வார கருட தரிசனம் செய்வதால் சுபங்கள் உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் பெருவீர்கள்.

மேனேஜரிடம் நல்ல பணியாளர் யார் என்று கேட்ட எலான்! அதன்பிறகு வைத்த ஆப்பு!!

click me!