செவ்வாய் பகவான் தான் போரின் கடவுள். பூமா தேவியுடைய புத்திரன். இவருக்கு கருணையும், ஆளுமையும் உண்டு. முருகனுக்கு ஏற்ற நாளும் செவ்வாய்கிழமை என்பார்கள். செவ்வாய் பகவான், முருகன், பூமாதேவி ஆகியோரை வணங்கி செவ்வாய் அன்று மங்கலப் பொருட்கள் வாங்குவோருக்கு செல்வம் பல மடங்கு பெருகிவரும் என்பது ஐதீகம்.
செவ்வாய் தோஷ பரிகாரம், துர்கா ஹோமம், ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பூமி பூஜை போன்ற பூஜை வழிபாடுகளை செவ்வாய் கிழமை அன்று செய்யலாம். எந்த தோஷ பரிகார பூஜையானாலும் செய்ய செவ்வாய் கிழமை சரியான நாளாகும்.