தோஷங்களில் பல வகை உண்டு. அதில் இந்த பித்ரு தோஷத்திற்குப் பயப்படாதவர்களே யாரும் இருக்க முடியாது. இது எப்படி ஏற்படுகின்றது என்றால் ஒருவரின் இறுதி காலங்களில் அவர்களது பிள்ளைகள் சரிவர கவனித்து கொள்ளாமல் இருப்பதினால், முன்னோர்களை சரிவர வழிபடாமலும், திதி கொடுப்பது மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாமல் இருந்தாலும், கருச்சிதைவு செய்வதனால் பித்ரு தோஷம் வரும் என்று கூறப்படுகிறது.