நவகிரகங்களை எந்தெந்த கிழமையில் வழிபட வேண்டும்? சூரியன், குரு பகவானை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்..!

First Published | Jul 19, 2023, 9:44 AM IST

ஒரு மனிதனின் வாழ்வை நவகிரகங்கள் தான்  தீர்மானிக்கிறது. நன்மைகள் மற்றும் தீமைகள் என்பது இந்த நவகிரகங்களின் அமைப்பால் தான் நடக்கின்றன. ஒருவர் போன பிறவியில் செய்த புண்ணியம் தான் இந்த பிறவியிலும் நன்மைகளாக அமைகிறது. அதேபோன்று போன பிறவியில் செய்த பாவங்கள் தான் இந்த பிறவியில் தோஷங்களாக வருகிறது என்பதை கேள்விபட்டிருக்கிறோம். 

ஒரு மனிதனின் வாழ்வை நவகிரகங்கள் தான்  தீர்மானிக்கிறது. நன்மைகள் மற்றும் தீமைகள் என்பது இந்த நவகிரகங்களின் அமைப்பால் தான் நடக்கின்றன. ஒருவர் போன பிறவியில் செய்த புண்ணியம் தான் இந்த பிறவியிலும் நன்மைகளாக அமைகிறது. அதேபோன்று போன பிறவியில் செய்த பாவங்கள் தான் இந்த பிறவியில் தோஷங்களாக வருகிறது என்பதை கேள்விபட்டிருக்கிறோம். 

நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பது பக்தர்கள் பலருக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஏனெனில் நவகிரகங்களை வழிபடும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 7 கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும் என்றும் ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்.  இப்படி சுற்றலாமா? என்பதில் சந்தேகமும் இருக்கிறது. நவகிரகங்கள் இருக்கும் நிலையை வைத்தே ஒரு மனிதன் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ போகிறான்? என்று துல்லியமாக கணித்து விடுவார்கள். அப்படிப்பட்ட இந்த நவகிரகங்களை எந்தெந்த கிழமையில் வழிபடுவது? எந்தெந்த நன்மைகளை கொடுக்கக் கூடியது? என்பதை பார்ப்போம்.

ஞாயிற்றுக் கிழமை

முதலாவதாக, நவ கிரகத்தில் முதல் கிரகமாக இருக்கும், சூரிய பகவானை ஞாயிற்றுக் கிழமை வழிபட்டு வருபவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா வளமும், நலமும் கிடைக்கும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. சீரான சிந்தனையும் தெளிவான முடிவு எடுக்கும் திறன் வளர கூடிய அற்புத ஆற்றலைப் பெறுவார்கள்.

Tap to resize

திங்கள் வழிபாடு: 

சந்திர பகவானை திங்கட்கிழமை தோறும் வழிபட்டு வருபவர்களுக்கு எல்லா புகழும் பெறக்கூடிய வாய்ப்புகள் கிட்டும். கோவிலுக்கு சென்றால் திங்கட் கிழமையில் நவகிரகத்தில் சந்திரனுக்கு உரிய வஸ்திரத்தை சாற்றி சந்திர பகவான் மந்திரங்களை உச்சரித்து அவரை வழிபட்டு வந்தால் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் நீங்கி மனம் ஒருநிலைப்படும். 

செவ்வாய் வழிபாடு: 

செவ்வாய் பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். நம்மை சுற்றி இருக்கும் எத்தகைய பகைவர்களையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும்.திருமண தடைகள் அகலவும் சொந்த வீடு அமையவும் வழிபட வேண்டிய கிரகம் செவ்வாய் பகவான் ஆகும்.

புதன் கிழமை வழிபாடு: 

புதன் பகவானை வழிபட்டு வந்தால் நல்ல அறிவாற்றலும் பெருகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபட்டு வந்தால் படித்தது மறந்து போகாது. அது மட்டுமின்றி அவர்களுக்கு படிக்கும் பொழுது கவனம் சிதறாமல் மனம் ஒருமுகப்படும்.

வியாழக்கிழமை: 

வியாழன் அன்று குரு பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், செல்வ செழிப்பும் ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தொடர்ந்து வியாழக்கிழமையில் குரு வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

வெள்ளிக்கிழமை வழிபாடு: 

வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை வழிபட்டு வர எல்லா வளமும், நலமும்  உண்டாகும். திருமண யோகம் கிடைக்க, சுக்கிர பகவானை வழிபட வேண்டும்.  குழந்தை பாக்கியம், கடன் தொல்லை நீங்க, வீடு, மனை, சொத்துக்கள் போன்ற சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அத்தனை சம்பத்துக்களையும் பெறுவதற்கு சுக்கிர வழிபாடு செய்து வருவது நல்லது.

சனிக்கிழமை: 

சனி நாளில் சனி பகவான் வழிபாடு செய்துவர ஆயுள் பலம் பெருகும். நீண்ட ஆயுளுக்கு சனிக்கிழமையில் சனிபகவான் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். அடுத்து, நாம் செய்யும் பாவத்திற்கு ஏற்ப தண்டனையையும், புண்ணியத்திற்கு ஏற்ப அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக்கூடிய சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது நலம் தரும்.

ராகு மற்றும் கேது பகவான்:

நிழல் கிரகங்களாக செயல்படும், ராகு மற்றும் கேது பகவான் வழிபாட்டிற்கென தனிப்பட்ட ஒரு கிழமை கிடையாது. எந்த கிழமை வேண்டுமானாலும், இராகு கேது பகவான் வழிபட்டால் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படும். இவர்கள்  பெயர், புகழ், பதவி போன்றவையும் அடையும் யோகம் பெறுவார்கள்.

Latest Videos

click me!