கண் துடிப்பது, அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் மற்ற நாட்டிலும் சில நம்பிக்கைகள் நிலவி வருகிறது. நம் உடலின் மற்ற இயக்கங்களைப் போலவே, இது கூட சாதாரணமானது. அதிலும் தானாக சரியாகும் என கூறப்பட்டாலும் பலரும் ஜோதிட காரணங்களை இன்றும் நம்பி வருகின்றனர். அதன்படி பார்த்தால் நம்முடைய வலது (அ) இடது கண் துடித்தல், அப்படி நம் கண் துடிக்கும் நேரம், பாலினம் அடிப்படையில் பலன்கள் வெவ்வேறாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஆண்களின் வலது கண் துடித்தல்
ஆண்களுடைய வலது கண் துடித்தால் (Right Eye Twitching For Male ) நல்ல காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதாவது தொழில், வர்த்தகம், வேலை ஆகியவற்றில் நல்ல செய்தி காதுகளை வந்து சேரும்.
ஆண்களின் இடது கண் துடித்தல்
ஒருவேளை ஆண்களுக்கு இடது கண் மட்டும் துடித்தால் (Left Eye Twitching For Male) மோசமான அறிகுறியாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு காலம் கடினமான பலன்களை கொடுக்கலாம். இடது கண் துடித்தால் அந்த ஆண்கள் கூடுதல் கவனமாக இருப்பதே அவருக்கும், அவரை சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் நல்லது.
பெண்களின் வலது கண் துடித்தல்
பெண்கள் கண்களில் அதிகம் கவனம் காட்டுவார்கள். அழகு குறித்த ஆர்வம் உள்ளவர்கள் கண்மை பூசி கொள்வார்கள். அவர்களின் வலது கண் துடித்தால் (Right Eye Blinking For Female) அது கெட்ட சகுனம். அனுதினம் அவர்கள் செய்யும் விஷயங்களில் கூட மொக்கை வாங்குவார்களாம். அவர்களுக்கு மோசமான விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.