893வது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி நகரம் - ஏழுமலையான் தரிசன விதிமுறைகளில் மாற்றம்!

First Published Feb 24, 2023, 10:45 AM IST

ஆசியாவிலேயே மிக்பெரிய பணக்கார கடவுளான ஶ்ரீ வெங்கடாஜலபதி வசிக்கும் திருப்பதி நகரின் 893வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
 

லக்ஷ்மி தேவியைத் தேடி வைகுண்டத்தை விட்டு பூமியை அடைந்த மகா விஷ்ணு, ஸ்ரீநிவாசர் என்ற பெயரில் ஆதிவராக ஸ்தலமான திருமலை மலைக்கு வந்து கலியுக ரட்சகராக வீற்றிருக்கிறார் என புராணங்கள் தெரிவிக்கின்றன
 

அவதார புருஷரான ஏழுமலையானின் பாதபீடம் சப்தகிரி மலையில் அமைந்துள்ளது. இந்த பாதபீடம் பல நூற்றாண்டு வரலாறுகளை சுமந்துகொண்டுள்ளது. திருமலை ஆகமத்தின் படி இந்த பணிகளை ராமானுஜாச்சாரியார் 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தி திருப்பதி நகரத்தைத் தோற்றுவித்ததாக வரலாறு கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
 

அவதார புருஷரான ஏழுமலையானின் பாதபீடம் சப்தகிரி மலையில் அமைந்துள்ளது. இந்த பாதபீடம் பல நூற்றாண்டு வரலாறுகளை சுமந்துகொண்டுள்ளது. திருமலை ஆகமத்தின் படி இந்த பணிகளை ராமானுஜாச்சாரியார் 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தி திருப்பதி நகரத்தைத் தோற்றுவித்ததாக வரலாறு கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

அச்சான்றுகளின் படி திருப்பதி நகரின் 893-வது பிறந்தநாள் இன்று (பிப்.24) தேதி அன்று கொண்டாடப்படுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு திருவிழாக்கள், சாஸ்திர சடங்குகள் திருப்பதியில் கொண்டாடப்பட்டு வந்துள்ளன.

பதினோராம் நூற்றாண்டில் ராமானுஜச்சாரியார் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் நெறிமுறைகளை வகுத்துச் சரியான பூஜை முறைகளையும், ஆகம விதிகளையும் கட்டமைத்தார். இந்த பூஜை பொறுப்புகளைக் கண்காணிப்பதற்கு பஞ்சராத்திர துணை ஜீயர் என்ற அமைப்பு அமைக்கப்பட்டது. இந்நாளில் அது திருமலை திருப்பதி தேவஸ்தானம் என அழைக்கப்படுகிறது.
 

பின்னர், கோயிலின் நான்கு புறமும் பெரிய பெரிய மாடவீதிகள் அமைக்கப்பட்டு அங்கு அர்ச்சகர்களின் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. கோவிந்த பட்டினம் என்ற பெயரில் மாடங்களும், மக்கள் தொகையும் விரிவாக்கம் செய்யப்பட்டன.

அ்வ்வாறு உருவான கோவிந்த பட்டினம், தற்போதைய திருமலை அடிவாரத்தில் உள்ள கபில தீர்த்தம் வரை நீண்டு தற்போதைய திருப்பதி நகரம் உருவானதாக அங்கே கிடைக்கப்பெறும் பல்வேறு கல்வெட்டுகள் இந்த வரலாற்றை தெளிவுபடுத்துகிறது.

இந்நிலையில் திருப்பதி நகரின் பிறந்தநாளை முன்னிட்டு திருமலை தேவஸ்தானம் சார்பில் நான்கு மாத வீதிகளிலும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

click me!