குண்டுமணி தங்கம் கூட இல்லாம வருத்தமா.. இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்தால்..கணக்கு தெரியாத அளவிற்கு நகை சேரும்

First Published | Feb 24, 2023, 1:37 PM IST

தங்க நகைகளே சேரவில்லை என வருந்துபவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் போதும்.. தங்க நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். 

இன்றைய காலக்கட்டத்தில் தங்கம் இல்லாதவர்களுக்கு மதிப்பு இல்லை. வீட்டில் இருக்கும் தங்க நகைகள் தான் ஒருவரின் செல்வத்தை கணக்கிடுகிறது. தற்போது கூட சில குடும்பங்களில் குண்டுமணி தங்கம் கூட இல்லாமல் இருக்கும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பரிகாரம் உதவலாம். இதை செய்தால் தங்க நகைகள் அதிகம் சேரும். 

தங்கம் சேர பரிகாரம் செய்யும் முன்பு வீட்டுக்கு அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சின்ன மூக்குத்தி ஒன்றை வாங்கி காணிக்கையாக கொடுங்கள். அட! என்னங்க நாங்களே குண்டுமணி தங்கம் கூட இல்லைனு தான பரிகாரத்தையே செய்ய நினைக்குறோம். நீங்களும் அதற்கு தங்கத்தை வாங்கி கடவுளுக்கு கொடுக்க சொன்னால் எப்படி? என்கிறீர்களா? 

Tap to resize

அம்மனுக்கு பரிகாரம் 

அம்மனுக்கு நீங்கள் சமர்ப்பிக்கும் தங்கம் சின்னதாக இருந்தாலும் உங்களிடம் வரும்போது பல மடங்காக பெருகி வரும். கொஞ்சம் சிரமப்பட்டாலும் சிறிய அளவில் தங்க மூக்குத்தி வாங்கி அம்மனுக்கு காணிக்கையாக கொடுங்கள். இதை செய்த பின்னர் அம்மனுக்கு மலர் வைத்து தீபமேற்றி வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு செய்ய வாய்ப்பு இருந்தால் யாரேனும் ஒருவருக்கு உணவு வாங்கி கொடுங்கள்.  

இதையும் படிங்க: பூஜை ஆரத்தி தட்டில் ஏன் பணம் வைக்க வேண்டும் என்ற இந்து வழிபாட்டு பாரம்பரியம், நம்பிக்கையின் காரணம் தெரியுமா?

நம்முடைய முன்னோர் உணவு, இருப்பிடம், ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என பிரார்த்தனை செய்து ஆலயங்களுக்கு பல பொருட்களை தானமாக வழங்கினார்கள். இப்படி கோயிலுக்கு தானமாக நாம் கொடுக்கும் ஒவ்வொரு பொருளின் பின் ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் வாழ்க்கையில் எந்த குறையும் ஏற்படாது என முன்னோர் நம்பினார்கள். 

இதையும் படிங்க: மாசி சங்கடஹர சதுர்த்தி.. இந்த நேரத்தில் புது தாலிக்கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம்.. விலகும் ஓடும் சனி!

அப்படியான நம்பிக்கையின் நிமித்தம் நாம் இந்த ஒரு பரிகாரத்தை செய்ய வேண்டும். மூக்குத்தியாக அம்மனுக்கு நீங்கள் சாற்றும் அந்த குண்டுமணி தங்கம், மீண்டும் உங்களிடம் பன்மடங்காக வரும். இதனால் மேலும் மேலும் தங்கத்தை சேர்க்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். தங்கம் சேர எத்தனையோ முயற்சிகளை நாம் செய்கிறோம். அதனுடன் இந்த பரிகாரத்தையும் செய்தால், தங்கமே இல்லையே என மனம் நொந்து கொள்பவர்களுக்கு கூட போதும் என்கிற அளவிற்கு தங்கம் சேரும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து அம்பிகையின் ஆசியை பெற்று தங்கம் சேர்க்கும் வாய்ப்பை பெறுங்கள். அம்மன் அருள் இருந்தால் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ முடியும். அருகில் நல்ல ஜோதிடர் இருந்தால் ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். 

Latest Videos

click me!