வீட்டில் விளக்கு ஏற்றும் போது இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!

First Published Jan 12, 2023, 4:02 PM IST

vastu tips: நம் வீட்டில் இறைவனை வழிபட விளக்கு ஏற்றும் போது சில தவறுகளை தவிர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இந்து சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு சடங்கிற்கு முன்பும் விளக்கு ஏற்றுவது முக்கிய அங்கம். பூஜைகள் முடிந்த பிறகு இறைவனுக்கு ஆரத்தி எடுப்பதும் வழக்கம். இவை செய்யாமல் அந்த வழிபாடு நிறைவடையாது என நம்பப்படுகிறது. நாம் விளக்கில் ஒளி ஏற்றும்போது தேவர்களும் இறைவனும் மனம் குளிர்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. நம் பிரார்த்தனையின் போது தெய்வங்கள் மகிழ விளக்கு ஏற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். அதற்கு உதவியாக விளக்கேற்றும் போது செய்யக்கூடாத தவறுகளை இங்கு காணலாம். 

ஜப்பானியர்கள் உடைந்த பொருள்களில் தான் கலைநயமும் அழகும் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் நம் வழிபாட்டை பொருத்தவரை உடைந்த விளக்குகளை பயன்படுத்துவது தவறு. சடங்குகளில் உடைந்த விளக்குகள் அசுபம். அதில் விளக்கேற்றினால் குடும்பத்தில் அமைதி கெடுவதாக நம்பப்படுகிறது. இறைவனின் அருளும் நம்மை சேராமல் போகக் கூடும். இறைவனுக்கு செய்யும் விஷயங்களில் குறை வைக்கக் கூடாது. 

விளக்குகள் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம். மண் விளக்குகளை பயன்படுத்தும் போது அவற்றை ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதும். உலோக விளக்குகளை பயன்படுத்தினால் அவற்றை தேய்த்து நன்றாக சுத்தம் செய்த பிறகு ஒளி ஏற்ற வேண்டும். சுத்தமான விளக்குகள் வீட்டிற்கு நிம்மதியின்மையை கொடுக்க கூடியவை என்று நம்பப்படுகிறது. 

பொதுவாக நாம் வீட்டில் வாசலில் வெறும் தரையில் விளக்கு ஏற்றுவோம். கூடுதல் பலன் கிடைக்க அரிசி அல்லது மற்ற பொருள்களின் மீது விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். விளக்கு ஏற்றி சில நிமிடங்களிலே அணைக்க கூடாது. கொஞ்சம் நேரம் ஒளிர வேண்டும். சனி பகவானின் கோபத்தை தணிக்க எள் விளக்கு ஏற்றலாம். 

இதையும் படிங்க; Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

இந்து சாஸ்திரத்தின் படி ஒரு விளக்கு ஒளியில் இருந்து மற்றொரு விளக்கை ஏற்றுதல் கூடாது. ஒவ்வொரு விளக்குகளையும் தனித்தனியாக ஒளியூட்ட வேண்டும். விளக்கு வைக்கும் போது மேற்கு திசையில் வைப்பதே தவிர்த்து விட்டு, கிழக்கில் வைக்க வேண்டும். மேற்கு திசை ஆடம்பர செலவுகளை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. முன்னோர்களை நினைத்து தெற்கு திசையில் தீபம் ஏற்றலாம். இதனால் வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெருகும். நாள்தோறும் மாலை நேரங்களில் வீட்டு வாசலில் விளக்கு வைக்கலாம். 

இதையும் படிங்க; Pongal wishes 2023: பொங்கல் போலவே இன்பம் பொங்கட்டும்... உங்களுக்கான பொங்கல், போகி பண்டிகை வாழ்த்துகள் இதோ...

வீட்டில் விளக்கு ஏற்ற நினைப்பவர்கள் காலை 5 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் விளக்கேற்றினால் நல்ல பலனை பெறுவார்கள். நீங்கள் தினமும் விளக்கேற்றுபவராக இருந்தால் மேற்கண்ட தவறுகளை செய்யாமல் இறைவனை வழிபடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.  

இதையும் படிங்க; Kaanum pongal 2023: காணும் பொங்கலில் போக வேண்டிய கோயில்கள்.. சுற்றுலா தலங்கள் முழுவிவரம்!

click me!