Sun transit to Makara Rasi: பொங்கலில் மகர ராசிக்குள் நுழையும் சூரியன்; இவர்களுக்கு கொட்டப் போகிறது அதிர்ஷடம்!!

Published : Jan 12, 2023, 02:47 PM ISTUpdated : Jan 16, 2023, 03:10 PM IST

சூரியன் மகர ராசியில் நுழைகிறார். இதனால் பாதிப்புகள் ஏற்படுமா? உங்களது வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும்? என்பதை ஜாதகம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் நுழையும் போது மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இம்முறை சூரியன் ஜனவரி 14, சனிக்கிழமை இரவு மகர ராசிக்குள் நுழைகிறார். அதனால்தான் மகர சங்கராந்தி பண்டிகை ஜனவரி 15 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. (மகர சங்கராந்தி 2023 ராசி பலன்)  இந்த பண்டிகையின் சிறப்பு முக்கியத்துவம் மத நூல்களிலும் விளக்கப்பட்டுள்ளது. சூரியன் தனது இருப்பிடத்தை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் எதிரொலிக்கும். சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு மோசமான பலனும் கிடைக்கும்.  

PREV
112
Sun transit to Makara Rasi: பொங்கலில் மகர ராசிக்குள் நுழையும் சூரியன்; இவர்களுக்கு கொட்டப் போகிறது அதிர்ஷடம்!!

மகர சங்கராந்தி அன்று சூரியனின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். இவர்களது பணி நீண்ட நாட்களாக தேங்கிக் கிடப்பதாக இருந்தால், அதை முடித்து விடலாம். செல்வம் தொடர்பான விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். நோய்கள் விலகும்.

212

சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் ஏற்பட்டு, திடீரென வேலைப்பளு அதிகரிக்கும். அதே சமயம் மகிழ்ச்சியும் அடைவீர்கள். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் பலம் அதிகரிக்கும்.

312

இந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் சூரியன் சரியானது என்று சொல்ல முடியாது. இவர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இதனுடன், ஆபத்தான வேலைகளை தவிர்க்க வேண்டும். பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் கூட கவனமாக இருக்கவும், இல்லையெனில் நிதி இழப்பு ஏற்படலாம். சில வேலைகளை விருப்பமில்லாமல் செய்ய வேண்டியது வரும்.

412

சூரியன் மகர ராசியில் இருப்பதால், அதன் அம்சம் உங்கள் லக்னத்தில் இருக்கும். அதனால் உங்களுக்கு உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணை தொடர்பான பிரச்சனைகளும் தலைதூக்கும். குடும்பத்தில் ஒருவருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உத்தியோகத்தில் யாருடைய ஆதரவும் கிடைக்காமல் ஏமாற்றம் ஏற்படும்.
 

512

இவர்கள் சூரியனின் ராசி மாற்றத்திற்குப் பின்னர் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் அல்லது வேலையில் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல் தொடர்புடையவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். குடும்பத்துடன் எங்காவது செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்கள் தங்களது பணியில் மகிழ்ச்சியை அடைவீர்கள். 

612

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்களும் நன்மைகளைப் பெறலாம். தந்தையின் ஒத்துழைப்பு உங்களுக்கு நன்றாக துணை செய்யும். குழந்தை தொடர்பான நல்ல செய்தி ஒன்று கிடைத்து புதிய நம்பிக்கையை தரும். பொதுவாக, நேரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது.
 

712

சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். எங்காவது பணம் சிக்கியிருந்தால், அது தற்போது கிடைக்கலாம். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். மாமியார் ஆதரவுடன் சொத்து, வாகனம் வாங்கலாம். தொழில், வியாபாரத்திலும் நன்மைகள் கிடைக்கும். 

812

இந்த ராசிக்காரர்கள் விரும்பாவிட்டாலும் பயணம் செல்ல வேண்டியது வரும். பயணங்களில் சில நன்மை தரும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதற்கும் இது நல்ல நேரம் காலமாகும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

912

சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகள் கூடும். கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். வாகனம் ஓட்டும்போது முழு கவனம் செலுத்த வேண்டும். சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் நல்ல முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவீர்கள், அதில் நீங்கள் பலனையும் பெறலாம்.

1012

இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் பணம் சம்பாதிக்க முடியும். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். பிள்ளையின் வெற்றியால் மனம் மகிழ்ச்சியடையும். பண விஷயத்தில் தெரியாதவர்களை நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் உங்களது பணியால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

1112

சூரியன் உங்களின் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த ராசிக்காரர்கள் தங்களுடைய விலை மதிப்பற்ற பொருட்களை கவனித்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இந்த நேரத்தில் கிடைக்கும். இறக்குமதி, ஏற்றுமதியுடன் தொடர்புடையவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

1212

இந்த ராசிக்காரர்களின் எதிரிகள் தோல்வி அடைவார்கள். நினைத்தாலும் யாருக்கும் தீங்கு செய்ய முடியாது. வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் லாபம் அடைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களது பனியால் சந்தோசம் அடைவார்கள். மாணவர்கள் இந்த நேரத்தில் வெற்றி பெறலாம். குழந்தைகள் தொடர்பான விஷயங்கள் உங்களை தொந்தரவு செய்யலாம்.
 

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories