நாம் வசிக்கும் வீடு என்பது நம்முடைய இன்பம், துன்பம் எல்லாவற்றையும் அறிந்தது. அதனால் தான் வீட்டை வெறும் அறைகளாக கருதமுடியவில்லை. வீட்டில் எதிர்மறை சக்திகள் இருந்தால் அவை நம் மனதையும் நிம்மதியையும் பாதிக்கும். உங்களுடைய வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் பொறாமை எண்ணங்கள் தோன்றுக்கூடும். நம்முடைய வாழ்வில் திருப்தி இருக்காது. நிம்மதியான இடமாக இருக்கும் வீட்டில் எதிர்மறையான சிந்தனைகள் அணுகாமல் இருக்க வாஸ்து நிபுணர்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றுங்கள்.
வீட்டிற்கு நல்ல வண்ணம் தேவை!
நம் வீட்டில் பூசப்படும் வண்ணங்கள் நம்முடைய மனநிலையுடன் தொடர்புடையது. வீட்டின் உள்ளும், புறமும் சரியான வண்ணத்தை தேர்ந்தெடுத்து பூச வேண்டும். அப்போதுதான் நேர்மறை சக்தி வீட்டில் குடி கொள்ளும். வாஸ்து நிபுணரிடம் இது குறித்து நீங்கள் ஆலோசனை பெறலாம்.
வடகிழக்கு என்றால் இள-நீலம் வண்ணமும், கிழக்கு என்றால் வெள்ளை (அ) இள-நீலம் வண்ணமும் பூசலாம். அக்னியுடன் தொடர்புள்ள தென்கிழக்கு திசையில் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, வெள்ளி ஆகிய வண்ணங்களை பூசினால் நேர்மறை ஆற்றலை கூட்டும். வடக்கு என்றால் பச்சை, பிஸ்தா பச்சை ஆகிய வண்ணம் பூசலாம்.
வடமேற்கு எனில் வெள்ளை, இள-சாம்பல், கிரீம் போன்றவை ஏற்றது. இந்த திசை வாயு பகவானுக்கு ஏற்றது. வருணனுக்கு ஏற்றது மேற்கு என்பார்கள். இதற்கு நீலம் அல்லது வெள்ளை ஏற்றவை. தென் மேற்கு திசை என்றால் பீச், மண் நிறம், பிஸ்கட் நிறம் அல்லது இளம் பழுப்பு போன்றவை தேர்வு செய்யலாம். தெற்கு திசை எனில் சிவப்பு, மஞ்சள் அம்சமாக இருக்கும்.