வீட்டில் எத்தனை வாசல்கள் இருந்தால் செல்வம் பெருகும்!! உங்க வீட்டு வாசல் இப்படி இருந்தா அமோகமா வாழலாம்!!

First Published Jun 16, 2023, 11:39 AM IST

வீட்டில் எத்தனை வாசல்கள் இருப்பது சுபமான பலன்களை தரும். வீட்டிற்கு எத்தனை வாசல்களை அமைக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை இங்கு காணலாம். 

நம் வீட்டில் இருக்கும் வாசல்கள் எண்ணிக்கை முக்கியமானது. சிலர் தங்களுடைய வீட்டில் நிறைய வாசல் வைத்திருப்பார்கள். சிலருக்கு வீட்டின் முன், பின்னும் மட்டுமே இரண்டு வாசல்கள் காணப்படும். இப்போது கட்டப்படும் பெரும்பாலான வீடுகளில் ஒற்றை வாசல் தான் காணப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒன்று முதல் மூன்று வரை வாசல்கள் அமைக்கலாம். இதுவே சரியான எண்ணிக்கையும் கூட. இதற்கு மேலாக வாசல்களை அமைப்பவர்களுக்கு பொருளாதார பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. 

நம் வீட்டில் வாசல் என்பது மகாலட்சுமி உள்ளே வரும் நுழைவு வாயில். இதனை சரியாக அமைப்பது வீட்டில் பிரச்சனைகளை குறைக்கும். நாம் வீட்டின் வாசலை அமைக்கும் போது வாஸ்து விதிகளை பின்பற்ற வேண்டும். தலைவாசலை தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் வைக்கக் கூடாது என வாஸ்து சொல்கிறது. ஒருவேளை நீங்கள் அதுபோல அமைத்திருந்தால் இதற்கான வாஸ்து பரிகாரங்களை செய்து விடுங்கள். 

தலைவாசல் தென்மேற்கு திசை, தென்கிழக்கு திசைகளில் அமைந்துள்ள வீட்டில் உள்ளவர்களுக்கு நிதி பிரச்சனை உடல் நல கோளாறு, துர்மரணங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது. நீங்கள் முழுக்க முழுக்க தெற்கு திசையில் (100%) மட்டுமே வாசல் அமைத்திருந்தால் அங்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. கொஞ்சம் தென்கிழக்கு அல்லது தென்மேற்கு நோக்கி வாசல் வைத்திருந்தால் பாதிப்புகள் ஏற்படும். 

வாசல் எண்ணிக்கை: 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் இரண்டு வாசல் வைத்து கட்டுவார்கள். நிறைய ஜன்னல்கள் அமைப்பார்கள். இதனால் வீட்டில் உள்ள வாயு வெளியே செல்லவும், வெளியில் இருந்து காற்று உள்ளே வரவும் வசதியாக இருந்தது. வீட்டின் ஆரோக்கியம் சீராகவும், செல்வ வளமும் செழிப்பாக காணப்பட்டது. குறிப்பாக, முன் வாசலுக்கு நேராக பின் வாசல் அமைந்திருப்பது நல்ல பலன்களை தரும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது மாதிரியான வீடுகள் குறைந்து விட்டன. 

ஒற்றை வாசல் கொண்ட வீட்டை விட இரண்டு வாசல் அமைத்திருக்கும் வீடு ரொம்ப நல்லது. இங்கு வாழ்பவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள். பின்புற வாசல் கொண்ட வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி தங்கும். ஏனென்றால் நண்பர்கள், உறவினர்கள் என எப்போதும் வீடு கலகலவென இருக்கும்; அன்பும் ஆதரவும் பெருகி காணப்படும். மோசமான பிரச்சனைகளை கூட அவர்களால் சமாளித்து வீட்டில் மகிழ்ச்சியை தக்க வைக்க முடியும். இதற்கு காரணம் வீட்டில் முன்பக்க வாசலும், பின்பக்க வாசலும் அமைத்திருப்பதே ஆகும். 

சில வீடுகள் காண்பதற்கு குடோன் போல இருளடைந்து காணப்படும். போதிய ஜன்னல்களும் அமைத்திருக்க மாட்டார்கள். இது மாதிரியான வீட்டில் நிச்சயமாக வாடகைக்கு கூட குடி செல்ல வேண்டாம். இங்கு வீண் பண விரயம், மன அழுத்தம், கணவன் மனைவி பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். வாஸ்துபடி, உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் நிதி மேம்பாடு அடைந்து வளமாக வாழ வாசல் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. வாசல், ஜன்னல் வழியாக காற்றோட்டம் நிரம்பி வீடு வெளிச்சமாக காணப்பட வேண்டும். இங்கு சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றினால் எல்லாம் சுபமாக இருக்கும். 

இதையும் படிங்க: இந்த 5 கெட்ட பழக்கம் உங்க கிட்ட இருந்தா டக்னு மாத்திக்கோங்க... மீறினால் வறுமையை கொண்டு வரும்!!

click me!