உங்க வீடு தெற்கு திசைல இருக்கா? செல்வம் பெருக இதையெல்லாம் மறக்காம செய்யுங்க!!

First Published | Jun 16, 2023, 10:30 AM IST

கிழக்கு, வடக்கு ஆகிய திசைகளை நோக்கிய வீடு தான் அதிர்ஷ்டம் என சிலர் நம்புகின்றனர். ஆனால் தெற்கு திசையை நோக்கிய வீடும் சில நன்மைகளை கொண்டுள்ளது. 

கிழக்கு வடக்கு திசைகள் தான் வீட்டிற்கு நல்லது என கருதப்படுகிறது. ஆகவே வீட்டை வாங்கும்போது சரி புதிய வீடு கட்டும்போதும் சரி கிழக்கு மற்றும் வடக்கு திசை பார்த்த வீடுகளை மக்கள் தேர்வு செய்கின்றனர். தெற்கு திசையை பார்த்த வீடு நல்ல பலன்களை தராது என்றும் சில தவறான புரிதல்கள் இன்றும் காணப்படுகிறது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, தெற்கு திசையை நோக்கி வீட்டிலிருந்தும் வாஸ்து விதிகளை கடைப்பிடித்து வந்தால் மற்ற வீடுகளை போலவே செல்வ செழிப்பு பெருகிவிடும். நீங்கள் தெற்கு பார்த்த வீட்டில் வசித்தால் அங்கு செல்வம் பெருக என்னென்ன வாஸ்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

தெற்கு நோக்கிய வீட்டு மனையை நீங்கள் வாங்கியிருந்தால் அங்கு வீடு கட்டும்போது வீட்டின் வாசல் தென்மேற்கில் அமைக்கவேண்டாம். இதற்கு பதில், தென்கிழக்கு திசையில் வாசல் இருக்குமாறு கட்டுங்கள். இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு நிலைக்கும். 

Latest Videos


தெற்கு திசை நோக்கிய நிலத்தில் வீட்டை கட்டியெழுப்பும்போது தெற்கு திசையை விட அதிகமாக வடக்கு பக்கம் திறந்த வெளியாக இருக்க வேண்டும். இங்கு கனமான பொருள்களை வைக்கக் கூடாது. மேற்கை விட கிழக்கு திசையில் திறந்த வெளியை அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இதனால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பணமும் நன்கு புழங்கும். 

இதையும் படிங்க: நெற்றியில் திருநீறு வைத்தால் இத்தனை நன்மைகளும் கிடைக்குமா? உண்மையான பின்னணி என்ன தெரியுமா?

தெற்கு நோக்கிய வீட்டில் வடகிழக்கு மூலையில் எந்த சேதாரமும் ஏற்படாமல் இருக்க வேண்டும். இந்த பகுதியில் விரிசல், பிளவுகள் போன்ற எதுவும் ஏற்படக் கூடாது. தென்மேற்கு மூலை உயரம் அல்லது பள்ளமாக இருக்கக் கூடாது. இவை இருந்தால் வாஸ்து தோஷம் ஏற்படும். 

தெற்கு திசை நோக்கியபடி வீட்டைக் கட்டி தளமிடும் போது சமமாக தளத்தை அமைக்க வேண்டும்; ஏற்ற இறக்கமாக கட்டக் கூடாது வீட்டின் நீரோட்டம் வடகிழக்கு நோக்கி இருக்க வேண்டும். 

தெற்கு திசை நோக்கிய வீட்டில் தண்ணீர் தொட்டி, குழாய், கிணறு ஆகியவை வடக்கு திசை அல்லது வடகிழக்கு திசையில் அமைக்க வேண்டும். இதை பின்பற்றுவதால் வீட்டில் செல்வம் குவியும். 

இதையும் படிங்க: இந்த 5 கெட்ட பழக்கம் உங்க கிட்ட இருந்தா டக்னு மாத்திக்கோங்க... மீறினால் வறுமையை கொண்டு வரும்!!

click me!