இந்த 5 கெட்ட பழக்கம் உங்க கிட்ட இருந்தா டக்னு மாத்திக்கோங்க... மீறினால் வறுமையை கொண்டு வரும்!!

First Published | Jun 15, 2023, 5:13 PM IST

நம்மிடம் உள்ள சில பழக்கங்கள் வாழ்க்கையில் கெட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக வாஸ்துபடி சில பழக்கங்கள் நம்மை ஏழ்மை நிலைக்கே தள்ளும். 

ஜோதிட சாஸ்திரங்கள் நம்முடைய வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய பல விஷயங்களை சொல்கிறது. அந்த வகையில் இயல்பாக செய்யும் சில செயல்கள் கூட நமக்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது. சில பழக்கம் நம்மை பொருளாதார ரீதியாக மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும். நீங்கள் நிதி பிரச்சனையில் சிக்காமல் இருக்க தவிர்க்க வேண்டிய 5 பழக்கங்களை இங்கு காணலாம். 

இரவில் நகம் வெட்டுதல்: 

இரவில் நகம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும் என வீட்டில் உள்ள பெரியோர் அறிவுறுத்துவர். பகலில் நகம் வெட்டுவதை தவிர்த்து மாலையில் அல்லது இரவில் நகம் வெட்டினால் வாஸ்துபடி பிரச்சனைகள் ஏற்படும். இரவில் நகம் வெட்டுவது வீட்டிற்கு வறுமையை கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. உங்களுக்கு எதிர்பாராத பண இழப்பும் ஏற்படும். இந்து மத நம்பிக்கைகளின் படி, வீட்டிற்கு மகாலட்சுமி மாலை வேளையில் தான் வருவார் என்பது ஐதீகம். அந்த நேரத்தில் நகம் வெட்டிக் கொண்டிருந்தால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாவோம். இதனால் வறுமை உண்டாகும்.

Tap to resize

சுத்தமாக வைத்திரு: 

இரவில் தூங்கும் முன்பாக சமையலறையில் உள்ள பயன்படுத்திய பாத்திரங்களை கழுவி தூய்மையாக வைக்க வேண்டும். அப்படி செய்யாமல் சமையலறையை அழுக்கு பாத்திரங்களுடன் அப்படியே விட்டுவிடுவது வீட்டிற்கு வறுமையை கொண்டு வரும். வீட்டின் சமையலறை சுத்தமாக இல்லாவிட்டால், லட்சுமியின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம். இதனால் பண பிரச்சினைகள் ஏற்படும். 

காலணி அடுக்கு: 

சனிபகவானின் மோசமான தாக்கம் ஏற்படாமல் இருக்க வீட்டில் செருப்பு, ஷூ ஆகியவற்றை ஆங்காங்கே சிதறி கிடக்காமல் அடுக்கி வைக்க வேண்டும். நம்முடைய பாதத்துடன் தொடர்புடைய பொருட்கள் சனிபகவானுடனும் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே வீட்டில் அறுந்து போன செருப்பு, பயன்படுத்தாத காலணிகள் இருந்தால் அவற்றை அவ்வப்போது அகற்றி விட வேண்டும். வீட்டிற்கு முன்பாக செருப்பு சிதறி கிடக்காமல் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தால் மட்டுமே வீட்டிற்கு பொருளாதார பிரச்சனைகள் ஏற்படாது. இதைப் பின்பற்ற தவறினால் வீட்டில் உள்ள பொருளாதார நிலை பாதிப்புக்கு உள்ளாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியிலும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

தண்ணீரை வீணாக்க வேண்டாம்: 

நாம் தண்ணீரை வீணாக்கும் பழக்கம் கொண்டிருந்தால் நம்மிடம் பணம் தங்காது. எந்த அளவுக்கு ஒருவர் தண்ணீரை வீணாக்குகிறாரோ அதே அளவு பணத்தை செலவழிக்கக் கூடும். உங்களுடைய வீட்டில் குழாய் சேதமாய் இருந்தால் அல்லது குழாயில் நீர் கசிந்து கொண்டே இருந்தால் அதனை உடனடியாக சரி செய்யுங்கள். இல்லையென்றால் வீட்டில் பண பிரச்சனை ஏற்படும்.

இதையும் படிங்க: மயானமே மாளிகை! சாம்பல் பூசி நிர்வாணமாக திரியும் அகோரிகளின்.. திகிலூட்டும் வாழ்க்கையை பற்றி தெரியுமா?

வீட்டின் வாசலில் உட்கார்வது: 

நேர போக்குக்காக சிலர் வீட்டின் பிரதான வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். வாஸ்து படி வீட்டின் பிரதான வாசலில் உட்கார்ந்து இருப்பது மங்களகரமானது கிடையாது. நீங்கள் இப்படி அமர்வதால் பண பிரச்சினைகள் ஏற்படும். உங்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திலும் சிக்கல்கள் ஏற்படலாம். 

இங்கு குறிப்பிட்டுள்ள ஐந்து பழக்கவழக்கங்களும் உங்களிடம் இருந்தால் இன்றிலிருந்து அதை கைவிடுங்கள். உங்களுடைய பொருளாதார பிரச்சினைகள் தானாக சரியாகும். 

இதையும் படிங்க: நெற்றியில் திருநீறு வைத்தால் இத்தனை நன்மைகளும் கிடைக்குமா? உண்மையான பின்னணி என்ன தெரியுமா?

Latest Videos

click me!