மயானமே மாளிகை! சாம்பல் பூசி நிர்வாணமாக திரியும் அகோரிகளின்.. திகிலூட்டும் வாழ்க்கையை பற்றி தெரியுமா?

First Published | Jun 15, 2023, 10:44 AM IST

நம்ப முடியாத வழிபாட்டு முறைகள், திகிலூட்டும் உணவு பழக்கம்...அகோரிகளை பற்றிய வினோத தகவல்களை இங்கு காணலாம். 

அகோரிகளை மண்டையோட்டு சாமியார்கள் என குறிப்பிடுவார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறை சாதாரண மனிதர்களுடைய வாழ்க்கையில் இருந்து வேறுபட்டு வித்தியாசமாக இருக்கும். நம்மால் அதை நினைத்து கூட பார்க்க முடியாது. அவர்களுடைய தோற்றம், நடை, உடை, உணவு, பூஜை, விதிமுறைகள் போன்றவை திகிலூட்டக் கூடியவை. பெரும்பாலும் அவர்கள் கெட்ட சக்திகளுடன் தான் பயிற்சி எடுப்பதாக பலர் நினைக்கின்றனர். உண்மை என்ன? வாங்க பார்க்கலாம். 

யார் இந்த அகோரிகள்? 

சிவனின் மறுவடிவமாக அகோரிகள் தங்களை கருதுகின்றனர். அது மட்டுமின்றி தத்தாரேயர், வேறு சில யோகிகளின் வடிவமாகவும் தங்களை நம்புகின்றனர். நம் நாட்டில் காசிதான் அகோரிகளின் வசிப்பிடமாக இருக்கிறது. அங்கு இயல்பாக அகோரிகள் சுற்றி திரிவதை நம்மால் பார்க்க முடியும். இந்தியா தவிர நேபாளத்தில் அகோரிகள் அதிகமாக வசிக்கின்றனர்.

கடவுளோடு இரண்டறக் கலக்க விரும்பும் முனிவர்கள், துறவிகள், ரிஷிகளை போன்றே இறை சிந்தனையுடன் முயற்சி செய்யும் மற்றொரு வகையினர் தான் அகோரிகள். அகோரிகளின் வாழ்க்கை முறை, சடங்குகள் பூஜைகள் எல்லாமே அமானுஷ்யமாக இருக்கும். பொதுவாக அகோரிகளை நினைத்தாலே நமக்கு ஆடைகள் இல்லாத அவர்களுடைய தேகமும், கையில் மண்டை ஓடுகளும், வினோதமான பூஜைகளும், பலி கொடுப்பதும் இறந்தவர்களின் சடலங்களை உண்பதும் தான் நினைவுக்கு வரும். எவ்வளவு கொடூரம்!! உண்மையில் அகோரிகளின் உலகம் இப்படிதான் இயங்குகிறதா? வாங்க பார்க்கலாம். 

Tap to resize

அகோரி என்ற பெயர் ஏன்? 

அகோரி என்பது சமஸ்கிருத சொல். இது அகோர் என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது. இதற்கு பல அர்த்தமுண்டு. அகோர் என்றால்... இருள் இன்மை, எளியது, பயங்கரமானதல்ல என்பது அர்த்தமாகும். இந்து சமயத்தை பொறுத்தவரை துறவிகள், சாமியார் எல்லாமே சைவம் தான் பின்பற்றுவார்கள். ஆனால் அகோரிகள் இதற்கு நேர்மாறானவர்கள். மாமிசம் இல்லாத உணவை அவர்கள் சுவைப்பதில்லை என்றுதான் சொல்லவேண்டும். வரையறுக்கப்பட்ட இயல்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்வதில்லை. சாதாரண மனிதர்கள் அருவறுக்கும் வாழ்க்கையை தான் அவர்கள் மனம் உகந்து வாழ்கிறார்கள். 

வழிபாடு: 

போதையின் அடிமையாக இருக்கும் அகோரிகளை கண்டால் நம்மில் பலருக்கு அச்சமும் வெறுப்பும் தன்னால் வந்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. மயானத்தில் தான் இவர்கள் உண்டு உறங்குகிறார்கள். மயானம் தான் இவர்களின் மாளிகை. ஆதியும் அந்தமுமான சிவனை அகோரிகள் வழிபடுகிறார்கள். மயான சாம்பல்களை உடலில் பூசி திரிவார்களாம். சிவனின் கோரமான வடிவங்களான பைரவர், வீரபத்திரரை அகோரிகள் வழிபடுகிறார்கள். 

இந்தியாவில் காசி நகரம் தான் அகோரிகளின் கூடாரமாக உள்ளது. ஆனால் மற்ற சாமியார்களை போல இவர்கள் வசிப்பிடத்தை எளிதில் கண்டு கொள்ளமுடியாது. எப்போதும் தனிமையில் சிவனை நினைந்து உருகும் இவர்கள் கும்பமேளாவின் போது கூடுகிறார்கள். கங்கையில் எறியப்படும் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார்கள். சாம்பலில் வெளுத்த உடலில் மனித எலும்புகளை கோர்த்து மாலைகளாக அணிந்து கொள்வது அகோரிகளின் தோற்றத்தை வெறுக்கத்தக்கதாகவும் அச்சமூட்டுவதாகவும் மாற்றுகிறது. 

அகோரிகளின் வழக்கம்: 

அகோரிகள் தியானத்தில் ஆழ்ந்திருப்பார்கள். எதையும் சொந்தமாக்கும் நோக்கமல்ல இந்த தியானத்தின் பின்னணி. தன்னைத் தானே உணர்ந்து கொள்வதுதான் அவர்களின் நோக்கமாகவே உள்ளது. அதற்கென மந்திரங்களை உச்சரிக்கிறார்கள். அகோரிகளை மோசமான மந்திரவாதிகள் என மக்கள் நினைக்கின்றனர். தீய சக்திகளின் மந்திரங்களால் இவர்கள் எதையும் செய்வார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் அது தவறான புரிதல். அகோரிகளில் பலர் தங்களை சிவனாக கருதுகிறார்கள். 

தங்களை சிவனாக நினைப்பதால் கையில் மண்டை ஓடு, மணி ஆகியவை எல்லாம் வைத்தபடி மோட்சம் செல்ல அதிக சக்தி கொண்ட மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களுடைய உலகம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். அகோரிகளின் வினோத வாழ்க்கை முறை வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளது. 

இதையும் படிங்க: சாம்பல் பூசி பிணத்துடன் கொடூரமாக உடலுறவு கொள்ளும் அகோரிகள்.. திகிலூட்டும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?

அகோரிகளுக்கும் விதி உண்டு: 

சாதாரணமாக அகோரி ஆகமுடியாது. முதலாவதாக, 12 வருடங்கள் ஆண்டுகள் கடும் தவம் புரிய வேண்டும். அகோர குரு ஒருவருடைய வழிகாட்டுதலில் சில சடங்கள், விதிகளை பின்பற்றி ஆன்மிக பலத்தை கூட்ட வேண்டும். உங்களுக்கான அகோரி குருவை கண்டுபிடிப்பது ரொம்பவே சிரமம். அகோரிகளின் நிர்வாணம் கூட பக்தியின் உச்சம் என சொல்லப்படுகிறது. 

Latest Videos

click me!