வியாழன் அன்று மஞ்சள் பொருட்கள் தானம் செய்யவும்:
மீன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் பிரச்சனைகளைச் சந்தித்து, அதனால் மகிழ்ச்சியும், நிம்மதியும் குலைந்திருந்தால், வியாழக் கிழமையன்று வாழைப்பழம் போன்ற மஞ்சள் பொருட்களை தானம் செய்யவும். இதுதவிர வெல்லம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை பசுவிற்கு கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் முன்னேற விரும்பினால் வாழைமரம் மற்றும் பீப்பலை வணங்க வேண்டும். அதுபோல்வே, தொடர்ந்து 11 வியாழக் கிழமைகளில் வழிபடுவதும், 11 பரிகாரங்கள் செய்வதும் உங்களுக்கு நல்ல பலனை தரும். குறிப்பாக வழிபாட்டின் போது "ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம" என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.