மறந்தும் தானமாக இந்த 1 பொருளை கொடுக்காதீங்க!! மீறினால் துரதிர்ஷ்டமும் தரித்திரமும் உங்களை ஆட்டிப் படைக்கும்!!

First Published | Jun 8, 2023, 5:38 PM IST

Vastu Tips: வாஸ்துவின் படி எந்தெந்த விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

வாஸ்து சாஸ்திரம் இந்து மதத்தில் உள்ள பழமையான விஷயம். ஒவ்வொரு பொருளின் பயன்பாடுகளும் அதில் கூறப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, அதை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், நாம் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். 

கத்தரிக்கோலை தவறாக பயன்படுத்தினால் என்னாகும்?

கத்தரிக்கோல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குடும்ப உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஸ்து சாஸ்திரத்திலும் சில விதிகள் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, வெற்று கத்தரிக்கோலை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. சும்மா காற்றை வெட்டி விளையாடி பார்ப்போமே அதைத் தான் செய்யக் கூடாது. மற்றவர்களுக்கு கத்தரிக்கோலை தானமாக/ கடனாகக் கொடுக்கக்கூடாது. இது மங்களகரமானதாக கருதப்படவில்லை.

Tap to resize

கத்தியின் வாஸ்து விதிகள் என்ன?

வாஸ்து சாஸ்திரத்தில் கத்தியை வைத்துக்கொள்ளும் முறையும் உள்ளது. சமையலறையில் ஒருபோதும் தலைகீழாக கத்தியை வைக்க வேண்டாம். கத்தியின் விளிம்பு எப்போதும் கீழே இருக்க வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து நேராது. கூர்மையடையாத அல்லது துருப்பிடித்த கத்திகளை சமையலறையில் வைக்கவே கூடாது. இது திடீர் உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கிறது. நீங்கள் மிகப் பெரிய கத்தியைப் பயன்படுத்தினால், அது திருமண வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

துடைப்பம் வாஸ்து விதிகள்: 

துடைப்பம் பணத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. வாஸ்து படி, துடைப்பம் எப்போதும் மறைத்து வைக்கப்பட வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும் பின்னும் வீட்டை துடைக்கக் கூடாது. துடைப்பத்தை மிதிக்கக் கூடாது. துடைப்பம் ஒருபோதும் உடைக்கப்படக்கூடாது. இந்த வேலைகளை எல்லாம் செய்வதால் வீட்டில் வறுமை ஏற்படுகிறது. 

வீட்டு படிக்கட்டு வாஸ்து: 

வீட்டின் படிக்கட்டுகளுக்கும் சில வாஸ்து விதிகள் உள்ளன. படிக்கட்டுகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். இது எங்கும் உடைந்தோ அல்லது விரிசலுடனோ இருக்கக் கூடாது. ஸ்வஸ்திகா சின்னம் அல்லது சங்கின் சின்னம் வாசல் படிக்கட்டில் இருக்கக்கூடாது. இந்த விதிகளை மீறினால் வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்கும். 

இதையும் படிங்க: உங்களுக்கு பணக்கஷ்டம் ஜென்மத்துக்கும் வராது.. துளசி வேரை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Latest Videos

click me!