துளசியின் வேரும் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. நிதி நெருக்கடி பிரச்சனைகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் துளசி வேருக்கு பல பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைச் செய்வதன் மூலம் ஒரு நபரின் அனைத்து கஷ்டங்களும் விலகிவிடும்.
பணம் சேர பரிகாரம்:
பணப்பிரச்சனைகளால் நீங்கள் சிரமப்பட்டால், தினமும் காலையில் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி விடுங்கள். மாலையில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். இதனால், பணம் பெறுவதற்கான அனைத்து வழிகளும் தடையின்றி காணப்படும். துளசி வேரை எடுத்து வெள்ளி தாயத்தில் போட்டு கழுத்தில் அணியவும். இதை செய்வதன் மூலம், விரைவில் பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய பொருளாதார நிலையும் மேம்படும். மகாலட்சுமியும் இந்த பரிகாரத்தை செய்வதால் மனங்குளிர்வாள்.