நாம் பெரும்பாலும் வீட்டின் பல பகுதிகளை சுத்தம் செய்தாலும், மறந்து அல்லது பிறகு சுத்தம் செய்யலாம் என்று சில இடங்களை அப்படியே விட்டுவிடுவோம். இதனால் அங்கு சிலந்திகள் பெருகும். இதனால் ஒட்டடை, தூசு என அந்த இடம் அசுத்தமாகவே இருக்கும்.
சிலந்தி வலை:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சிலந்தி வலை இருப்பது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. அடிக்கடி அதை சுத்தம் செய்ய வேண்டும். இதை கடைபிடிக்காவிட்டால் அசுபமான விஷயங்கள் நடக்கும். நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ளவர்கள் சோம்பேறிகளாகவும், இயல்பிலேயே எரிச்சல் கொண்டவர்களாகவும், எண்ணங்களில் எதிர்மறையானவர்களாகவும் மாறுகிறார்கள்.