சிரிக்கும் புத்தர் சிலையை வைக்க சரியான திசை:
இந்த சிலையை வைக்க சரியான திசை வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரிக்கும் புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைப்பதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. படிக்கும் அறையில் சிரிக்கும் புத்தர் சிலையை வைத்தால் குழந்தைகளின் மனது படிப்பில் ஈடுபடும். படுக்கையறை அல்லது சாப்பிடும் அறை, கூடல் (ஹால்) ஆகியவற்றின் தென் கிழக்கு திசையில் வைப்பதால், அதிர்ஷ்டமும், வருமானமும் கூடும்.
நம்முடைய வீட்டில் சிரிக்கும் புத்தரை வைப்பதன் மூலம், வீட்டில் எதிர்மறை ஆற்றல் முடிவுக்கு வருகிறது. ஆகவே குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மன உளைச்சல் இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர்.