Vastu Tips : பெட்ரூம்ல இந்த மாதிரி போட்டாவை வைக்காதீங்க; திருமண வாழ்க்கைல பிரச்சனை வரும்!

Published : Nov 04, 2025, 06:45 PM IST

பெட்ரூமில் சில போட்டோக்களை வைத்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகு. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்

PREV
17
Vastu Tips For Bedroom

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் வசிக்கும் வீடு இருந்தால் உங்களது வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி வழியும். இதன் விளைவாக வீட்டில் எப்போதுமே சந்தோஷம், நிம்மதி நிலைத்திருக்கும். மேலும் வீட்டில் உள்ளவர்களும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.

27
Vastu Shastra Bedroom Photos

அந்த வகையில் வீட்டை அழகாக காட்ட பலரும் பலவிதமான பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள். அது மட்டுமல்லாமல் தூங்கும் அறையிலும் கூட சில போட்டோக்களை வாங்கி அலங்கரிப்பார்கள். ஆனால் சில போட்டோக்களை பெட்ரூமில் வைத்தால் கணவன் மனைவிக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டு, திருமண வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி எந்த மாதிரியான போட்டோக்களை பெட்ரூமில் வைக்க கூடாது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

37
ராதா கிருஷ்ணா இருக்கும் போட்டோ ;

வாஸ்து சாஸ்திரத்தின்படி ராதா- கிருஷ்ணன் இருக்கும் போட்டோ அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் இந்த போட்டோவை தூங்கும் அறையில் வைத்தால் கணவன் மனைவிக்கு இடையேயான அன்பு மற்றும் புரிதல் அதிகமாகும். ஆனால் ராதா அல்லது கிருஷ்ணா மட்டும் இருக்கும் போட்டோவை ஒருபோதும் படுக்கை அறையில் வைக்க கூடாது என்று கூறுகிறது வாஸ்து. இல்லையெனில் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

47
சிவன் மற்றும் பார்வதி இருக்கும் போட்டோ :

வாஸ்து படி, சிவன் மற்றும் பார்வதி இருக்கும் போட்டோவை தூங்கும் அறையில் வடகிழக்கு அல்லது வடக்கு திசையில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் இது உறவில் நம்பிக்கையை ஊக்குவிக்கும். ஆனால் சிவன் அல்லது பார்வதி தனித்தனியாக இருக்கும் போட்டோவை ஒருபோதும் படுக்கை அறையில் வைக்காதீர்கள்.

57
அனுமன் இருக்கும் போட்டோ :

வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் தூங்கும் அறையில் அனுமன் இருக்கும் போட்டோவை வைத்தால் தூக்கமின்மை, மன அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தம்பதிகளுக்கு இடையே மோதலை அதிகரிக்கச் செய்யும். வேண்டுமானால் அனுமன் போட்டோவை பூஜை அறை அல்லது வீட்டின் நுழைவாயிலில் வைக்கலாம்.

67
துர்க்கையின் போட்டோ ;

வாஸ்துபடி துர்க்கை கடுமையான மற்றும் வலிமையான ஆற்றலை கொண்ட தெய்வமாக சொல்லப்படுகிறது. எனவே துர்கையின் போட்டோவை நீங்கள் தூங்கும் அறையில் வைத்தால் உங்களது அமைதி சீர்குலைவது மட்டுமல்லாமல், கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடுகளை அதிகரிக்க செய்யும். வேண்டுமானால் துர்கையின் போட்டோவை பூஜை அறையில் அதுவும் கிழக்கு திசையில் வைத்து வழிபடலாம்.

77
தவம் அல்லது தியானம் செய்யும் போட்டோ :

வாஸ்து சாஸ்திரத்தின்படி, நீங்கள் தூங்கும் அறையில் தவம் அல்லது தியானம் செய்யும் போட்டோக்களை ஒருபோதும் வைக்கக்கூடாது. ஏனெனில் இந்த போட்டோக்களானது மன அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் கணவன் மனைவில் உறவில் தூரத்தை உண்டாக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories