உங்க கைக்கு பணம் வந்த வேகத்தில்.. ஒன்னும் இல்லாமல் விரயமா போகுதா? அப்போ வீட்டில் இந்த தவறுகளை செய்யுறீங்களா?

First Published | Mar 9, 2023, 10:27 AM IST

எவ்வளவு வருமானம் வந்தாலும் வீட்டில் பணம் தங்குவதில்லை என புலம்புபவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். 

நாம் நாள் முழுக்க உழைத்து கஷ்டப்படுவது போதுமான பணத்தை சம்பாதித்து நிம்மதியாக வாழ்வதற்காக தான். ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு நிற்காமல் பணம் விரயமாகி கொண்டே இருக்கும். ஏன் செலவாகிறது? எந்த வகையில் செலவுகள் கூடுகின்றன என்பது குறித்து குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு வீட்டு வாஸ்து அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் இந்த பதிவில் அது குறித்து காணலாம். 

வீட்டில் பண விரயமாக காரணங்கள்..

• ஆண்கள் வீட்டில் விளக்கேற்றினால் பணம் விரயமாகிவிடும் என சொல்லப்படுகிறது. 

• வீட்டு குழாய்களில் நீர் சொட்டிக் கொண்டே இருக்கக் கூடாது. அப்படி செய்தால் வீட்டு செல்வமும் அப்படியே கரையும் என்பது ஐதிகம். 

• ஈரத்துணிகள் உடனே காய போட வேண்டும். ரொம்ப நேரம் ஈரமாக போட்டு வைக்கக் கூடாது.

• வீட்டை வெளிச்சம் இல்லாமல் இருளாக போடுவது செல்வத்தை குறைக்கும். பகலில் ஜன்னல்களை திறந்து வெளிச்சத்தை அனுமதியுங்கள். இரவில் மின்சாரம் சேமிக்க இருளாக வைத்தால் தரித்தரம் வந்து சேரும். 

• வீட்டில் அதிக குப்பைகளும் ஒட்டடையும் அடைந்து கிடப்பது. வீட்டில் தேவையில்லாத பொருள்களை குவித்து வைப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். 

• சூரிய மறைந்த பின் வீட்டை சுத்தம் செய்வது, துடைப்பது பண விரயத்தை தூண்டும். இவை தவிர வீட்டின் திசைகள் பணம் விரயமாக காரணமாக இருக்கும். 

Tap to resize

திசைகளில் சிக்கல்... 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் தெற்குமேற்கு பகுதியில் குடும்பத் தலைவர் படுக்கை அறையை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தாவிட்டால் பணவிரயும் ஏற்படும். வீட்டின் தென்மேற்கு பகுதியில் தெரு பார்வை விழுவதாலும் பண விரயம் ஏற்படும். வீட்டின் தென்மேற்கு பகுதி, வடகிழக்கு பகுதியை காட்டிலும் தாழ்வாக அமைந்திருப்பதும் பண விரயத்திற்கு ஒரு காரணம். தென்மேற்கு திசையில் இருக்கும் அறையில் தான் பணப்பெட்டியை வைக்க வேண்டும். பணத்தை தேக்கு மரத்தால் ஆன பெட்டிகளில் வைப்பது நல்லது. தேக்கு மரத்தின் உறுதியான நிலைப்புத் தன்மை போல பணம் நம்மிடம் தங்கும் என நம்பப்படுகிறது. 

வீட்டின் வடமேற்கு பகுதியில் பாதிப்பை உண்டாக்கினால் பண விரயமாகும் வாய்ப்புகள் உண்டு. வடமேற்கு மூலையில் தவறு இருந்தால் பணம் வீட்டில் தங்காது. அதனை சரி செய்ய வேண்டும். வடமேற்கு கூரை தாழ்வாக அமையக்கூடாது. வீட்டில் ஏற்படும் சுப செலவுகள் நல்லது. அதாவது திருமணம், வீடு கட்டுதல் மாதிரியான சுப செலவுகளினால் வருந்த தேவையில்லை. மருத்துவம், கோர்ட் அலைச்சல் போன்றவை விரயம் தான். 

வீட்டுக்கு அருகே சுற்றிக் கொண்டிருக்கும் பறவைகளுக்கும், தெரு நாய்களுக்கும் பசியாற்றும் வகையில் அவ்வப்போது உணவு கொடுத்தால் பண விரயம் குறையும். 

இதையும் படிங்க: வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் நிம்மதி சுத்தமா இருக்காது.. ஓயாமல் சண்டை சச்சரவு தான்.. இதை பண்ணி பாருங்க..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் துளசி செடி வைத்தால் செல்வம் மற்றும் செழிப்பு அதிகமாகும். ஆனால் துளசி செடியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதுவே மங்களகரமானது. உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுவதற்கு துளசி செடி உத்தரவாதம். நேர்மறை ஆற்றல் இருக்கும் இடத்தில் பணத்தின் பாய்ச்சல் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. துளசி செடியை வைக்காவிட்டால் இனி வைத்து தினமும் வழிபடுங்கள். ஏற்கனவே வைத்திருந்தால் திசையை சரி பார்த்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: அனுபவித்த மொத்த துன்பமும் விலக.. இந்த ஒரு காரியத்தை பண்ணுங்கள்.. அனுமன் அருளால் அதிர்ஷ்டம் தேடி வரும்..

Latest Videos

click me!