நாம் கஷ்டப்பட்டு கட்டும் வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கும் என்றால் அந்த வீட்டில் நிம்மதி தங்காது. ஓயாமல் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். இப்படி வாஸ்து தோஷத்தால் மன நிம்மதி குலைந்து வெறும் உடலாக மட்டும் வாழ்பவர்கள் பலர். பல ஆயிரங்களை செலவு செய்து வாஸ்து நிபுணர்களை வீட்டிற்கு அழைத்து வந்து பல மாற்றங்களை செய்கின்றனர் சிலர். ஆனாலும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை என புலம்புவர். இங்கு எளிய காரியங்களால் எப்படி வாஸ்து தோஷத்தை நீக்குவது என்பதை காணலாம்.
கிரகலட்சுமி தான் வாஸ்து தோஷத்தை நீக்கி நமக்கு நிம்மதியான வாழ்க்கையை அருளுகிறார். இந்த கிரகலட்சுமி ஆசீர்வாதம் நம் மீது இருந்தாலே எந்த வாஸ்து தோஷமும் பலிக்காது. அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த கிரகலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுவது நம்முடைய வீட்டில் நிலை வாசல் தான்.
நம்முடைய முன்னோர் வீட்டு நிலை வாசலில் மேலே நிற்கக்கூடாது, நிலை வாசலின் மீது அமரக்கூடாது, நிலை வாசலை மிதிக்கக்கூடாது என பல அறிவுரைகள் கூறியிருக்கிறார்கள். ஏனென்றால் நிலை வாசலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் தான் கிரகலட்சுமியின் அருளையும் ஆசியையும் பூரணமாக நமக்கு கிடைக்கச் செய்யும்.
இந்துக்களில் இன்னும் சிலர் தங்களுடைய வீட்டை வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்வர். அதிலும் வெள்ளி அன்று நிலை வாசலை கழுவி மஞ்சள், குங்குமம் பூசி பூ வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த எளிய வழிபாட்டு முறை தான் கிரகலட்சுமியின் மனம் குளிர செய்ய நாம் செய்ய வேண்டியது. ஆனால் இப்போது அழகுக்காக மஞ்சள் பெயிண்டை நிலைவாசலில் அடித்து விட்டு மக்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். இதனால் தான் லட்சுமியின் அருளை தவற விடுகிறோம்.