குளிர் காலத்தின் இறுதியாகவும், வசந்த காலத்தின் தொடக்கமாகவும் அமைவது தான் ஹோலி. இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் வண்ணமயமான பண்டிகையாக திகழ்வது இந்த ஹோலி பண்டிகை. இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வண்ணம் பூசி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.