பண்டிகை காலம் தொடங்கிவிட்டாலே, நாம் சில பொருட்களை ஏழை எளியவருக்கு தானமாகவும், அல்லது நம்முடைய உறவினர்களுக்கு பரிசுகளை வழங்கியும் நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உண்டு.ஆனால், அப்படி பொருட்களை தானமாக கொடுக்கும், அதன் முழுப்பலனும் நமக்கு கிடைக்க வேண்டும். அதற்கு நீங்கள் கொடுக்கும் பொருட்கள் என்ன என்பதில் கவனம் தேவை.
ஏனெனில், சில பொருட்களை நீங்கள் பரிசாக கொடுப்பதன் மூலம் உங்களிடம் இருக்கும் மகாலட்சுமியின் அருள் நீங்கி விடுவதாக வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. பிறந்த நாள், திருமண நாள்போன்ற எந்த விசேஷங்கள் வந்தாலும் இந்த முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும். அப்படியான சில முக்கிய பரிசு பொருட்களை பற்றிய அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
விநாயகர் மற்றும் லட்சுமி இவை இரண்டு பேரும் ஒருசேர இருக்கும் புகைப்படம் அல்லது ஏதாவது ஒரு பரிசு பொருட்களை மற்றவர்களுக்கு பரிசளிக்க கூடாது. இருவரும் ஒன்றாக இணைந்த இடத்தில் ஐஸ்வர்யம் நிறைந்திருக்கும். எனவே ஐஸ்வரியம் நிறைந்த பொருட்களை மற்றவர்களிடம் பரிசாக கொடுக்கும் பொழுது உங்களுடைய அதிர்ஷ்டமும் அவர்களுக்கு சென்று விடுவதாக ஒரு நம்பிக்கை உண்டு.
அதேபோன்று, உப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு தானமாகவோ அல்லது பரிசாகவோ கொடுக்கக் கூடாது. இதுவும் மகாலட்சுமியின் அருளை தடை செய்கிறது.
அதேபோன்று, இரும்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருட்களையும் மற்றவர்களுக்கு பரிசாக கொடுக்கக் கூடாது என்று வேத சாஸ்திரங்கள் எச்சரிக்கிறது. வேண்டும் என்றால், அலுமினியத்தால் ஆன பரிசு பொருட்களை ஒருவருக்கு நீங்கள் பரிசாக கொடுக்கலாம். இதனால் உங்கள் உறவானது நீண்ட காலங்கள் நீடிக்குமாம்.