உங்கள் காதில் முடி முளைத்திருந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? வாஸ்து,சாஸ்திரம் கூறுவது என்ன..?

First Published | Oct 19, 2022, 10:19 AM IST

Ear astrology in tamil: உங்களுடைய காதில் முடி முளைத்திருந்தால் என்ன பலன் என்பதை, பற்றித்தான் நாம் பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம்.

முடி என்பது அழகின் அம்சமாக அமைகிறது. உடம்பில் முடி  வளர்வது இயல்பான ஒரு விஷயம். ஆனால் அது ஒழுங்காக பராமரித்தால் மட்டுமே அழகு நிலைக்கும்.  சருமத்தில் சிலருக்கு முடிகள் தென்படும் கூந்தலில் வளராத முடிகள் முகத்தில் கொஞ்சம் வேகமாகவே வளர்ந்துவிடும்.

மேலும் படிக்க Rudraksha Benefits: ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன..? யாரெல்லாம் அணிய வேண்டும் தெரியுமா..?

சிலருக்கு காது ஓரங்களிலும், கன்னத்திலும், தாடையின் கீழும், உதட்டுக்கு மேல் மீசை போன்றும் அதிகப்படியான முடிகளைப் பார்க்கலாம்.  இந்த முடிகளை அகற்ற க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினாலும் இவை தற்காலிக தீர்வாகவே இருக்குமே தவிர நிரந்தரமாக இருக்காது.

Tap to resize

ஆனால், அப்படி, எல்லோருக்கும் காதில் ரோமம் முளைப்பது கிடையாது. உங்களுடைய காதல் ரோமம் முளைத்திருந்தால் என்ன பலன் என்பதை பற்றித்தான் நாம் பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஒவ்வொரு ஆணும் பருவ வயதை எட்டிய பிறகு அவர்களது உடலில் கை, கால், மார்பு பகுதிகளில் அதிகபடியான முடி வளர்ச்சி உண்டாகும். இதற்கு காரணம் முடி வளர்வதை ஊக்குவிக்கும் ஆண்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பதுதான்.

அது போல காதிற்குள்ளே முடி முளைத்து இருப்பது வாஸ்து, சாஸ்திரத்தின் படி சுப பலன்களை குறிக்குமாம். ஒருவருக்கு காதில் நிறைய முடி முளைத்து காணப்பட்டால், அவர்கள் மிகச்சிறந்தமனிதராக, உயர்ந்தவராக திகழ்வார்கள்.  அவர் வாழ்வில் எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்கும் திறன் கொண்டவராம்.

முகம் மட்டும் வெள்ளையாக இருப்பவர்கள், இவர்களின் அறிவு பலத்தால் இவர்களே முதல்வராக இருப்பார்கள். குறிப்பாக தன்னுடைய தாய், தந்தை மீது அதிக பாசம் உடையவர்கள். அவர்களுக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்.  இவர்கள் எப்பொழுதும் மென்மையாகவும், தன்மையுடனும் இருப்பார்கள்.

காது மட்டும் வெள்ளையாக இருப்பவர்கள் சூரியனுக்கு இணையாக இருப்பார்கள். கவலைகளை உடனுக்குடன் மறந்துவிடும் ஆற்றலும் நல்ல திறமையும் இவர்களிடத்தில் காணப்படும். இவர்களின் அகங்கார குணமும், தான் என்ற எண்ணமும் இவர்களை நேசிப்பவரைக் கூட வெறுக்க செய்து விடும்.

அது போல காது அதிக அளவில் தொங்கியது போல இருப்பவர்கள் எதிலும் சாதுர்யம் மிக்கவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள்.குடும்பத்தை வழிநடத்தும் தன்மை கொண்டவர்கள். எந்த செயலையும் துணிவுடன் செய்பவர்கள். 

மேலும் படிக்க Rudraksha Benefits: ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன..? யாரெல்லாம் அணிய வேண்டும் தெரியுமா..?

Latest Videos

click me!