அள்ள அள்ள குறையாமல் பணம் வர.. கற்பூரத்தை கொண்டு 'இத' மட்டும் செய்ங்க..

Published : Sep 23, 2024, 06:38 PM IST

Camphor And Clove Vastu Tips : வீட்டில் கற்பூரம் மற்றும் கிராம்பை ஒன்றாக எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
15
அள்ள அள்ள குறையாமல் பணம் வர.. கற்பூரத்தை கொண்டு 'இத' மட்டும் செய்ங்க..
Camphor And Clove Vastu Tips

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்ற பழமொழி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். யாருக்கு தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருக்காது. மேலும் நல்ல செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புவோம். பணம் மன நிறைவையும், அமைதியையும், நம்முடைய தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. 

சொல்லப்போனால் பணம் என்று காலத்தில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. பணம் அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை அது அவர்கள் செய்யும் வேலையைப் பொறுத்து அமையும்.

இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் பணம் மற்றும் செல்வம் சேர பலர் பலவிதமான விஷயங்களை செய்வார்கள். ஒருவரது வீட்டில் பணம் மற்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டுமானால் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகமாக நிறைந்திருக்க வேண்டும் இது தவிர லட்சுமி தேவியின் அருளும் முழுமையாக கிடைக்க வேண்டும். 

25
Camphor And Clove Vastu Tips

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என சிறப்பு முக்கியத்துவம் உண்டு. எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பணம் மற்றும் செல்வம் அதிகரிக்கவும், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கவும் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் கிராம்பு மற்றும் கற்பூரத்தை ஒன்றாக எரிப்பது. 

கிராம்பு மற்றும் கற்பூரம் இவை இரண்டும் நல்ல மணமுடையவை. இவை இரண்டிலிருந்தும் வரும் வாசனை லக்ஷ்மி தேவிக்கு ரொம்பவே பிடிக்கும். முக்கியமாக இவை இரண்டையும் ஒன்றாக எரித்து அதிலிருந்து வாசனை மற்றும் புகையை வீடு முழுவதும் பரப்பி இருந்தால் வீட்டிற்கு பல நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? அது எந்த மாதிரியான நன்மைகள் என்று இப்போது விரிவாக நாம் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  குழந்தைக்கு பொல்லாத கண் திருஷ்டி நீங்க.. இப்படி சுத்தி போடுங்க..!

35
Camphor And Clove Vastu Tips

கற்பூரம் மற்றும் கிராம்பை எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

1. கற்பூரம் மற்றும் கிராம்பை வீட்டில் ஒன்றாக எரித்தால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். சிக்கி இருந்த பணம் உடனே வந்து சேரும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். முக்கியமாக பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வழிகள் உடனே கிடைக்கும். அதுவும் சிரமமின்றி.

2. கற்பூரம் மற்றும் கிராம்பை ஒன்றாக எரித்தால் வீட்டில் உள்ளவர்கள் மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றிலிருந்து விடுபடுவார்கள் மற்றும் அவர்கள் செய்யும் எல்லா விஷயங்களிலும் கவனத்துடன் செய்து சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

3. பொதுவாக இரவு நேரத்தில் எதிர்மறை ஆற்றல் வீட்டில் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இரவு நேரத்தில் கற்பூரம் மற்றும் கிராம்பை ஒன்றாக எரித்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி ஓடி, நேர்மறை ஆற்றல் நிரம்பி வழியும்.

45
Camphor And Clove Vastu Tips

4. இது தவிர இரவு நேரத்தில் கற்பூரம் மற்றும் கிராம்பை எரித்தால் வீட்டில் செல்வம் சேர்வதற்கான வாய்ப்பு அதிகம் கிடைக்கும் மற்றும் செய்யும் காரியங்கள் தடையின்றி சரியான முறையில் செய்து முடிப்பீர்கள். அதில் வெற்றியையும் காண்பீர்கள்.

5. கிராம்புடன் கற்பூரத்தை எரிக்கும் போது வீட்டில் அமைதி மகிழ்ச்சி நீடித்து இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே எப்போதும் அன்பு பாசம் நிலைத்து இருக்கும் மற்றும் அதிகரிக்கும்.

வீட்டில் கற்பூரம் மற்றும் கிராம்பு எரிக்கும் முறை :

பண பிரச்சனை நீங்க : நீங்கள் பண பிரச்சனையால் அவரிப்படுகிறீர்கள் என்றால், சில்வர் கிண்ணம் ஒன்றில் கற்பூரம், கிராம்பை ஒன்றாக வைத்து அதை இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன் எரிக்கவும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் பரவும். மேலும் விரைவிலேயே பண பிரச்சனை நீங்கும்.

55
Camphor And Clove Vastu Tips

திருமண வாழ்க்கையில் பிரச்சனை நீங்க : திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனையைப் போக்க 36 கிராம்புடன் ஆறு கற்பூரத்தை வைத்து எரித்தால் திருமண வாழ்க்கை இனிமையாக மற்றும் மகிழ்ச்சியாக நிறைந்திருக்கும்.

வீட்டில் செல்வம் அதிகரிக்க : இதற்கு வீட்டு வாசலில் இரண்டு கற்பூரம் மற்றும் ஒரு கிராம்பை வைத்து ஒன்றாக இருக்கவும். இதனால் வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் நுழையும், லட்சுமி தேவியும் வாசம் செய்வாள். முக்கியமாக இந்த பரிகாரத்தை நீங்கள் தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்க : உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை ஓட ஓட விரட்ட தினமும் காலை எழுந்தவுடன் கற்பூரம் மற்றும் கிராம்பை ஒன்றாக சேர்த்து எரிக்கவும். 

இதையும் படிங்க:  காகம் தலையில் தட்டினால் அசுபமா..? இதற்கு பரிகாரம் உண்டா..?

Read more Photos on
click me!

Recommended Stories