குழந்தை பிறந்த ஓரிரு வாரங்களில், அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி அல்லது பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, அந்த குழந்தைகளின் இடுப்பில் நாம் அரை ஞான் கயிறு கட்டி விடுவோம். இது மூட நம்பிக்கையோ அல்லது மத சம்பிரதாயம் என்றோ தான் இன்றைய இளம் தலைமுறையினர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிலர், வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறினார்கள் அதனால் தான் கட்டினோம் என்று கூறுகிறார்கள்.
waist Cord Benfits in Tamil: பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான ஆண்கள் வரை அரை ஞாண் கயிறு கட்டகட்டுவதை பார்ததிருப்போம். இதை ஏன் குழந்தைகளுக்கு கட்டாயம் கட்ட வேண்டும் என்பதற்கான காரணங்களை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.
இந்த அரைஞாண் கயிறு கட்டுவதால் அறிவியல், ஆன்மீக, மருத்துவ நலன்கள் ஒரு சேரக் கிடைக்கிறது.ஆகையால் தான் நமது முன்னோர்கள் முதல் இன்று வரை நாம் அனைவரும் காலகாலமாய் இதனை கட்டி வருகிறோம்.
பெயர் காரணம் :
அரைஞாண் என்பதில் அரை எனில் - இடுப்பு வரையிலான பாதி உடலை குறிக்கிறது. ஞான் என்பது- கயிரைக் குறிக்கும் சொல் ஆகும். இவை இரண்டையும் இணைத்தே அரைஞாண் என்று சொல்லப்பட்டது. குழந்தை பிறந்த சில நாட்களில் அவர்களின் இடுப்பில் தங்கம்,வெள்ளி அல்லது கருப்பு நிறத்தில் அரை ஞான் கயிறு கட்டி விடுவோம்.