மேஷம்:
குடும்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நீங்கள் எடுக்கும் முடிவுகள் பாசிட்டிவாக இருக்கும். நண்பருடனான பழைய பிரச்னை மீண்டும் எழும். ஆன்லைன் ஷாப்பிங்கின்போது பட்ஜெட்டை கவனத்தில்கொண்டு செயல்படவும். குடும்பத்துடன் ஆன்மீக செயலில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம்:
கடின உழைப்பு மற்றும் முயற்சியின் மூலம் கஷ்டமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். ஆன்மீக ஈடுபாட்டால் மன அமைதி நிலவும். சவாலை ஏற்றுக்கொள்வதன் மூலம் வெற்றி கிடைக்கும். நேர்மறையான செயல்களில் பிசியாக இருப்பீர்கள். தொழில் விஷயங்களை தவிர்க்காதீர்கள்.
மிதுனம்:
மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மன அமைதி அடைவீர்கள். முக்கியமான வேலை ஒன்றை முடிப்பீர்கள். முக்கியமான உரையாடலில் தகாத வார்த்தைகளை பயன்படுத்திவிட வேண்டாம். கமிஷன், இன்சூரன்ஸ் சார்ந்த தொழில்களில் ஆதாயம் கிடைக்கும்.
கடகம்:
உங்கள் கவலைகளும் பிரச்னைகளும் இன்று தீரும். உங்கள் திறமையால் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள். தவறான செயல்களிலிருந்து ஒதுங்கி இருக்கவும். இல்லையெனில் பிரச்னை ஏற்படும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சிம்மம்:
சோம்பேறித்தனத்தை தவிர்த்து முழு எனர்ஜியுடன் வேலை செய்யுங்கள். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, அவர்களது பிரச்னைகளை தீர்க்க உதவுங்கள். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழிலில் சிறு தடைகள் ஏற்படும்.
கன்னி:
வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி நடக்கவும். உங்கள் மனதில் பாசிட்டிவான மாற்றம் ஏற்படும். சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளை சுமூகமாக முடிக்கவும். தினசரி வருவாய் மற்ற நாட்களை விட இன்று அதிகமாக இருக்கும். கணவன் - மனைவி இடையே உறவு இனிமையாக இருக்கும்.
துலாம்:
உங்களுக்கு ஆதாயம் தரும் முடிவை எடுப்பீர்கள். புதிய வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். வேலையில் கட்டுப்பாட்டில் தேவை. குடும்ப விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
விருச்சிகம்:
உங்கள் தொடர்பு அதிகரிக்கும். அதன்மூலம் ஆதாயமும் அடைவீர்கள். அனுபவஸ்தர்களுடன் நேரம் செலவழியுங்கள். உதவி தேவைப்படும் நண்பருக்கு உதவி செய்யுங்கள். தொழிலில் முக்கியமான முடிவெடுப்பதற்கு முன் அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யவும்.
தனுசு:
இன்று உங்களுக்கு அருமையான வாய்ப்பு கிடைக்கும். அறிமுகமில்லாதவருடனான சந்திப்பு ஆதாயம் தரும். மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள். வாடகை சார்ந்த விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படும்.
மகரம்:
நீங்கள் முடிக்க நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடியுங்கள். உணர்ச்சிவசத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். உங்களுக்கு நெருக்கமானவர் மூலம் பிரச்னை ஏற்படலாம். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
கும்பம்:
இன்றைய நாள் உங்களுக்கு பாசிட்டிவாக தொடங்கும். திட்டமிட்டு வேலை செய்வீர்கள். உத்யோகம் மற்றும் குடும்ப பொறுப்புகளை பேலன்ஸ் செய்வது சவாலாக இருக்கும். ஆனாலும் உங்கள் வேலையை முறையாக செய்து முடிப்பீர்கள். கவனக்குறைவாக இருக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
மீனம்:
யாரிடமிருந்தும் உதவி எதிர்பார்க்காதீர்கள். உங்கள் வேலைகளை நீங்களே செய்து முடியுங்கள். அது நல்ல முடிவை தரும். யாரையும் அதிகமாக நம்பிவிடாதீர்கள். தொழிலில் இன்று எந்த முதலீடும் செய்ய வேண்டாம்.