இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் அக்ஷய திருதியும் ஒன்றாகும். இது இந்தியாவின் மிக முக்கியமான விழா என்றே கூற வேண்டும்.
அக்ஷயா எனில் சமஸ்கிருதத்தில் 'எப்போதும் குறையாது' என்று பொருள் .திருதியை எனில் 'மூன்றாவது' என்று பொருள். ஆகையால் இந்த நாளில் வாங்கும் எந்த பொருளாக இருந்தாலும் வளமும்,செழிப்பும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த முறை வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதியன்று அக்ஷய திருதியை கொண்டாடப் படவுள்ளது . அட்சய திருதியை அன்று எந்த ஒரு நற்செயலையும் செய்யத் தொடங்கினால் நல்லதொரு பலன் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்த நன்னாளில் சில பொருட்களை தானமாக கொடுத்தால் நீண்ட ஆயுள், குறையாத செல்வம் மற்றும் வளத்துடன் கூடிய செழிப்பு ஆகியவற்றை பேராக் முடியும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அக்ஷய திருதியையன்று தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டத்தை தரும் என்பது உண்மையெனினும் இன்று தங்கம் விற்கும் விலையை பார்த்தால் மயக்கம் தான் வரும் பலருக்கும்.
ஆக அனைவராலும் தங்கம் வாங்க முடியாத சூழ்நிலையில் இந்த நன்னாளில் தங்கத்தை தவிர வேறு சில பொருட்களை வாங்கலாம் என்றும் நமக்கு முன்னோர்கள் கூறி யுள்ளனர்.
அக்ஷய திருதியை அன்று தங்கத்தை தவிர்த்து வாங்க வேண்டிய சில முக்கிய பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அரிசி:
சாஸ்திரங்களின் படி அரிசி எல்லா விதமான எதிர்மறை ஆற்றல்களையும் எதிர்க்கும் தன்மை பெற்றவை. தவிர உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை தருகிறது
உப்பு :
கல் உப்பை வாங்கி பூஜை செய்தாலே போதுமானது அஷ்டலட்சுமிகளின் கடாட்சம் நம் வீடு தேடி வரும்
நெய்:
இந்து மதத்தில் நெய் தெய்வீகமான / புனிதமான பொருளாகக் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது தீமையைத் தடுப்பதோடு அல்லாமல் நோய்கள், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் எதிர்மறையைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாளில் நெய்யை எரிப்பதால் ( நெய் விளக்கேற்றுவதால் ) எதிர்மறை சக்திகள் விலகி, நேர்மறை சக்திகளையம், அதிர்ஷ்டத்தையும் தரும் என்று கூறப்படுகிறது.
தானியங்கள்:
தானியங்கள் செல்வத்தின்அடையாளங்களாக இருக்கின்றன. அரிசி, பார்லி,கோதுமை போன்ற தானியங்களை இந்த நாளில் வாங்கினால் அவை அதிர்ஷ்டத்தைத் தரும்