உங்க சமையலறையில் இந்த 4 பொருட்கள் வெச்சுக்காதீங்க! எந்த பொருள் எப்படி இருந்தால் குடும்பத்திற்கு நல்லது?

First Published | Apr 7, 2023, 6:03 PM IST

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டு சமையலறையில் உள்ள பொருள்கள் ஒரு நபரின் ஆரோக்கியத்திலும், முன்னேற்றத்திலும் நல்லது அல்லது கெட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது. 

சமையலறை சரியான திசையில் அமைவது முக்கியம். அதை போலவே, அங்கு வைக்கப்பட்டுள்ள எல்லா பொருளுக்கும் ஒரு தாக்கம் இருக்கும். வாஸ்து தோஷம் இருக்கும் இடத்தில் புண்ணியம் நீங்கி, பணத் தட்டுப்பாடு ஏற்படும் என்பது ஐதீகம். அதனால்தான் வாஸ்து சாஸ்திரப்படி சில பொருள்களை வீட்டில் வைக்கக் கூடாது என சொல்வார்கள். இங்கு சமையலறையில் வைக்கக் கூடாத பொருள்களை குறித்து தெரிந்துகொள்ளுங்கள். 

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சமையலறையில் கண்ணாடி அல்லது அது தொடர்பான எதையும் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. இதனுடன், துன்பத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். 

Tap to resize

சமையலறையில் ஏதேனும் உடைந்த பொருள்கள் இருந்தால் அதை நீக்குங்கள். உடைந்த பாத்திரங்கள் வீட்டிற்கு நல்லதல்ல. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். ஏனெனில் இத்தகைய பாத்திரங்கள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றன. இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

வாஸ்து சாஸ்திரப்படி சமையல் அறையில் துடைப்பம் வைக்கக் கூடாது. ஏனெனில் துடைப்பத்தில் அழுக்கு இருக்கிறது. இதனால் சமையலறையில் அழுக்கு அதிகமாகிறது. அழுக்கடைந்த பொருள்களை உணவு சமைக்கும் சமையலறையில் வைப்பதால், வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படும். 

இதையும் படிங்க: வீட்டில் தரித்திரம் நீங்க! முதல்ல இந்த 1 காரியம் செய்து பாருங்க! செல்வம் குவிந்து கொண்டே இருக்கும்..

வாஸ்து சாஸ்திரப்படி பூச்சிகளைக் கொல்லும் மருந்தை சமையலறையில் வைக்கக் கூடாது. இது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. இதனுடன், சாப்பிடும் இடத்தில் நச்சுப் பொருட்களை வைத்திருப்பது ஆபத்தானது. 

இதையும் படிங்க: பணத்தை மிச்சம் பண்ண முடியலயா? துளசி செடியை இந்த இடத்தில் வச்சு பாருங்க! வீட்டில் பணமழை தான்!

Latest Videos

click me!