ஜோதிட சாஸ்திரத்தை போன்றே வாஸ்து சாஸ்திர முறையும் பழமையானது என்றே கூறலாம். சில எண் கணிதத்தை அடிப்படையாக வைத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது. அதே போன்று வீடு கட்ட, வீட்டில் எந்த பொருட்களை எங்கே வைக்க வேண்டும், எந்த திசையில் என்ன இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி எந்த திசையில் எந்த அறை இருப்பது சிறப்பு, எந்த பொருட்கள் எந்த திசையில் அல்லது மூலையில் வைப்பது போன்ற தகவல்களை டெரிடந்த்து கொண்டால் வீட்டில் நேர்மறை சக்திகளும், சிந்தனைகளும், சுப பலன்களும் உண்டாகும்.
அதோடு வீட்டில் இருக்கும் பல்வேறு மூலைகளிலும், திசைகளிலும் என்னென்ன பொருட்களை எங்கே வைக்க வேண்டும் போன்ற தகவல்களையும் வாஸ்து சாஸ்திரம் கூறியுள்ளது.