Astrology: இந்த 4 ராசிக்காரர்கள் குறை கண்டுபிடிச்சிட்டே இருப்பாங்களாம்.! அவ்வளவு எளிதா சமாதானம் ஆக மாட்டாங்க.!

Published : Nov 17, 2025, 01:24 PM IST

top 4 zodiac signs always find mistakes: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள் எந்த காரியம் செய்தாலும் அதில் ஏதாவது குறை கண்டுபிடித்து கொண்டே இருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
எப்போதும் குறை கண்டுபிடிக்கும் ராசிகள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. சில ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் குறை கண்டுபிடிக்கும் இயல்புடையவர்களாக இருப்பார்களாம். பிறர் என்ன செய்தாலும் அதில் அவர்கள் திருப்தி அடைய மாட்டார்களாம். இது அவர்களின் அடிப்படை இயல்பு, அதிக எதிர்பார்ப்பு அல்லது பகுப்பாய்வு செய்யும் திறன் ஆகியவற்றால் இருக்கலாம். என்ன செய்தாலும் எளிதாக சமாதானம் செய்ய முடியாத ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இயல்பிலேயே பகுத்தறிவு கொண்டவர்கள். இவர்கள் சிறிய விவரங்களிலும் முழுமை இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். தங்களைச் சுற்றி உள்ளவர்கள், சூழ்நிலைகள் அல்லது ஒரு வேலையில் உள்ள குறைகளை கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மற்றவர்கள் கவனிக்காத சிறிய தவறுகளையும், குறைபாடுகளையும் கன்னி ராசிக்காரர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். 

அவர்களின் குறை கண்டுபிடிப்பு என்பது மற்றவர்களை காயப்படுத்துவதற்காக அல்ல. மாறாக விஷயங்களை மேம்படுத்த வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடனே செய்வார்கள். இருப்பினும் இவர்களின் தொடர்ச்சியான விமர்சனம் சில சமயங்களில் மற்றவர்களுக்கு எரிச்சலை தரலாம். இவர்கள் மற்றவர்களை விமர்சிப்பது போலவே தங்களையும் அதிக அளவில் விமர்சித்துக் கொள்வார்கள்.

35
மகரம்

மகர ராசிக்காரர்கள் சனி பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயல்பிலேயே ஒழுக்கமானவர்களாகவும், லட்சியம் மிக்கவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் ஒரு வேலையை அதிக தரத்துடன் செய்வார்கள். அதே தரத்தை மற்றவர்களிடமிருந்தும் எதிர்பார்ப்பார்கள். 

இவர்கள் இலக்குகளை அடைவதில் அதிக கவனம் செலுத்துவதால் தவறுகளை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே குறைகளை உடனடியாக சுட்டிக்காட்டி விடுவார்கள். இவர்களின் விமர்சனம் சில நேரங்களில் கண்டிப்பானதாகவும், கடுமையானதாகவும் தோன்றலாம். ஆனால் இவர்கள் செய்யும் விமர்சனம் பெரும்பாலும் செயல் திறனை மேம்படுத்துவதற்காகவே இருக்கும்.

45
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பிலேயே தீவிர பகுப்பாய்வாளர்கள். இவர்கள் எதையும் ஆழமாக ஊடுருவி அதில் மறைந்திருக்கும் உண்மைகளையும் நோக்கங்களையும் கண்டறிய முயற்சிப்பார்கள். மற்றவர்களின் நடத்தைகள், வார்த்தைகள், வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உள் நோக்கங்கள் ஆகியவற்றை விரைவாக புரிந்து கொள்ளும் கூர்மையான உள்ளுணர்வு கொண்டவர்கள். 

இவர்கள் ஒரு வித சந்தேக குணத்துடனே இருப்பார்கள். எப்போதும் ஒரு கேள்விகுறியுடனே பழகுவார்கள். இது குறை கண்டுபிடிக்கும் பழக்கத்தை அதிகரிக்கிறது. இவர்கள் அதிகம் உண்மை பேசுபவராக இருப்பதால் குறைகளை சுட்டிக் காட்டுவதற்கு தயங்குவதில்லை.

55
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் விழிப்புணர்வுடனும் அறிவு சார்ந்த நேர்மையுடனும் இருப்பார்கள். இவர்களின் குறை கண்டுபிடிப்பு என்பது தனிப்பட்ட விஷயங்களை விட, சமுதாய சிக்கல்கள் அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் அல்லது அறிவு சார்ந்த தவறுகளை நோக்கியே இருக்கும். இவர்கள் ஒரு விஷயங்களை பெரிய கண்ணோட்டத்தில் அணுகி அதில் உள்ள நியாயமான குறைபாடுகளை சுட்டிக்காட்டுவார்கள். 

சமூகத்தில் அல்லது ஒரு அமைப்பில் குறைபாடுகளை கண்டால் அதை திருத்த வேண்டும் என்கிற உந்துதல் இவர்களிடம் இருக்கும். இவர்கள் குறைகளை தேடி தேடி அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories