நீங்கள் ஒருமுறை போனால் போதும், எல்லா பிரச்சனையும் தீரும்.. சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள் பற்றி தெரியுமா?

First Published | Feb 21, 2023, 1:09 PM IST

kumbakonam temples: கும்பகோணத்தை ஒருமுறை சுற்றி வந்தால் வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பார்கள். 

கோயில் என்றாலே நமக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணமாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டில் அதிகமாக கோயில்களை உடைய ஒரு மாநகரம் எனில் அது கும்பகோணம் என்றுதான் சொல்ல வேண்டும். நவக்கிரகங்கள் உடைய கோயில்கள் இதில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இங்கு செல்வோர் தோஷங்கள் நீங்கவும், திருமண தடை விலகவும் வேண்டிக் கொண்டு செல்வார்கள். பல பக்தர்களின் வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேற காரணமாக இருக்கும் கும்பகோணம் கோயில்களை ஒருமுறை கண்டு தரிசித்தால் அவ்வளவு பலன்கள் கிடைக்கும். அதனால் தான் இந்நகரத்தை 'கோயில் நகரம்' என்கிறார்கள். இங்குள்ள எந்த கோயில்களை தரிசித்தால் என்ன பலன்கள் என்பதை இங்கு காணலாம். கரு முதல் சதாபிஷேகம் வரை பலனடைய இந்த பட்டியலில் உள்ள 20 கோயில்களில் ஏதேனும் ஒன்றில் சென்று வழிபட்டால் போதும். 

* கருத்தரிக்க வேண்டுவோர் கருவளர்ச்சேரிக்கு செல்ல வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் பாக்கியம் உண்டாகும். 

* கருத்தரித்த பின் அது நன்கு வளர்ந்து சுகப்பிரசவம் கிடைக்க வேண்டுவோர் திருக்கருக்காவூர் செல்ல வேண்டும். 

* யாரெல்லாம் நோயில்லா வாழ்வு வேண்டும் என நினைக்கிறார்களோ அவர் செல்ல வேண்டிய கோயில், வைத்தீஸ்வரன் கோயில். இங்கு வழிபட்டால் நோய் நொடிகள் தீண்டாது. 

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞானம் பெற சுவாமிமலையில் தரிசனம் செய்ய வேண்டும். 

* படிக்கும் குழந்தைகள் கல்வி, கலைகளில் வளர்ச்சி பெற்று வர கூத்தனூர் சென்று வழிபட வேண்டும். 

Tap to resize

* எடுத்த காரியம் வெற்றியை அடைய, மனதைரியம் கிடைக்கப் பெற பட்டீஸ்வரம் சென்று வழிபட வேண்டும். 

* உயர் பதவி வேண்டும் என முயற்சி செய்பவர்கள் கும்பகோணம் பிரம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் போதும். நல்ல வழி பிறக்கும். 

* செல்வ, செழிப்பு பெற ஒப்பிலியப்பன் கோயிலில் தரிசனம் செய்ய வேண்டும். 

* கடன் சுமை குறைய திருச்சேறை சரபரமேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். 

* இழந்த செல்வம் திரும்ப கிடைக்க திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்கு செல்ல வேண்டும். 

* பெண்கள் ருது ஆவதற்கும், ருது பிரச்சனைகள் முழுக்க தீரவும் கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை) கோயிலில் வழிபட வேண்டும். 

இதையும் படிங்க: மாசி மகம் 2023: எப்போது, யாருக்கு விரதமிருந்து வழிபட்டால் ஏழு ஜென்ம பாவமும் விலகும்.. விரத பலன்கள் முழுவிவரம்

* திருமணத்தடைகள் நீங்க திருமணஞ்சேரி, நல்ல கணவனை பெற கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை கோயிலுக்கு செல்ல வேண்டும். 

* தம்பதிகள் ஒற்றுமை வலுப்பெற திருச்சத்திமுற்றம், பிரிந்து போன தம்பதி மீண்டும் இணைய திருவலஞ்சுழி செல்ல வேண்டும். 

* பில்லி சூனியம் செய்வினைகள் விலம அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி, கோர்ட்டு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக திருபுவனம் சரபேஸ்வரர் சென்று வழிபட வேண்டும். 

இதையும் படிங்க: பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் அதிர்ஷ்டம்.. எந்த பகுதியில் விழுந்தால் கவனமா இருக்கணும் தெரியுமா?

செய்த பாவங்கள் விலகி ஓட கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல் செய்ய வேண்டும். நிச்சயம் பலன் கிடைக்கும். சிலருக்கு எம பயம் இருக்கும். அவர்கள் ஸ்ரீ வாஞ்சியம் சென்று வழிபட வேண்டும். நீண்ட ஆயுள் பெற விரும்பினால் திருக்கடையூர் சென்று வழிபடுங்கள். ஒருமுறை கும்பகோணம் சுற்றி அங்குள்ள கோயில்கள் வழிபட்டால் எல்லா பிரச்சனைகளும் தீரும். 

இதையும் படிங்க: சாமி ஆடுறவங்க சொல்லும் அருள் வாக்கு நிஜமா பலிக்குமா? அது உண்மையா? பின்னணி என்ன?

Latest Videos

click me!