சாமி ஆடுறவங்க சொல்லும் அருள் வாக்கு நிஜமா பலிக்குமா? அது உண்மையா? பின்னணி என்ன?

First Published | Feb 21, 2023, 10:29 AM IST

சாமி ஆடுதல், அருள் வாக்கு இதெல்லாம் உண்மை தானா? முழுமையாக தெரிந்து கொள்வோம். 

ஒருமுறை தோழி ஒருத்தி பேசி கொண்டிருக்கும்போது, அவளுடைய கோயில் கொடை பற்றி சொல்லி கொண்டிருந்தாள். அப்போது சாமி அருள் வாக்கும் சொல்லும் வைபவம் எப்படி நடந்தது? என்பதை விளக்கினாள். சாமி ஆடியவர் தோழிக்கு சொல்லிய அருள் வாக்கில், 'நீ எதிர்பார்த்து காத்திருப்பது வரும்' என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது தோழி கருவுற்றிருக்கிறாள். தான் குழந்தைக்கு ரொம்ப ஆசைப்பட்டதாகவும், அருள் வாக்கில் அதையே சாமி சொல்லியதாகவும், இப்போது மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறாள்.  

தோழியின் மகிழ்ச்சியை நானும் உடனிருந்து கொண்டாடிய பிறகு இதை குறித்து எழுதுகிறேன். யார் சாமி ஆடுகிறார்கள், யாருக்கு அந்த அருள் வாக்கு சொல்லும் பாக்கியம் கிடைக்கிறது. ஒரு சிலரே இதை செய்ய என்ன காரணம் என்பதை இங்கு காணலாம். 

கடவுள் நம்பிக்கை

ஒரு சிலர் மட்டும் தான் சாமி ஆடிக்கொண்டே அருள்வாக்கு சொல்வார்கள். சிலர் சாமி ஆடியபடியே மலையிறங்கிவிடுவார்கள். ஒருவார்த்தை கூட பேச மாட்டார்கள். எப்படி ஒரு நாணயம் இருபக்கங்களை கொண்டுள்ளதோ அப்படி இவ்வுலகிலும் இருதுருவங்கள் உள்ளன. நியூட்டனின் மூன்றாம் விதி கூட எல்லாவற்றிற்கும் எதிர்விசை உண்டு என கூறுகிறது. 

Tap to resize

உலகில் இருக்கும் எல்லா சக்திக்கும் எதிர்சக்தியும் உண்டு. நம்பிக்கை, நம்பிக்கையின்மை என இரண்டு பக்கம் உண்டு. சாமி உண்டு எனில் சாத்தானும் உண்டு. ஆத்திகர்கள் சாமி உண்டு என்றும் நாத்திகர்கள் இறைவன் இல்லையென்றும் கூறுகின்றனர். சிலர் இறைவனில்லை ஆனால் பிரபஞ்ச ஆற்றல் உண்டு என்கின்றனர். 

சாமி ஆடுவது உண்மையா?

கடவுளை நம்பாதவர்கள், அந்த நம்பிக்கையில் ஒன்றான சாமி ஆடுதல், அருள் வாக்கு கூறுவது ஆகியவற்றை பொய், மக்களை ஏமாற்றும் உத்தி என்கிறார்கள். ஆனால் ஆத்திகர்களோ அதை மனப்பூர்வமாக நம்புகிறார்கள். ஒவ்வொரு கோயில் திருவிழாக்களிலும் சாமி ஆடுதல் முக்கியமாக கருதப்படுகிறது. 

சாமி வரவழைக்கும் யுக்திகள்

1. வருணனை செய்து கூப்பிடுதல் - அந்த சாமிக்கு ஏற்ற பாடல் ஒன்றை பாடுவார்கள். 

2. உடுக்கை அடித்து உக்கிரமாக சாமியை அழைத்தல் 

3. தன்னை மறந்து மகிழ்வாய் சாமி அடி அருள் வாக்கு சொல்லுதல் - இந்த நபர்களுக்கு தனக்குள் சாமி வந்ததே தெரியாது. 

4. கெட்ட சக்தியும் ஆடும் - சில சமயங்களில் சிலருக்கு கெட்ட சக்தி கூட உடலில் புகுந்து கொள்ளும். இவர்கள் கோயிலுக்கு வந்து சன்னிதானத்தில் ஆடமாட்டார்கள். வெளியே தான் ஆடுவார்கள். இந்த நபர்கள் எலுமிச்சை பழம், வேப்பிலையை கொண்டு கையில் கொடுத்தால் வாங்கவே மாட்டார்கள்.

பண்டைய காலத்திலிருந்தே தெய்வ அருள்வாக்கு சொல்வது வழக்கமாக உள்ளது. தேவர்கள் ஜாதக அடிப்படையில் ஒருவரின் நல்லது, கெட்டது ஆகியவற்றை கூட கணித்து சொல்வார்கள். 

கிராமங்களில் சாமி ஆடுவது இன்றும் உள்ளது. அந்த கிராமத்தில் மழை வராவிட்டால், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், சாமி ஆடும் நபர்களுக்கு சாமி வரவைத்து, அருள் வாக்கு கேட்பார்கள். 

இதையும் படிங்க: பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் அதிர்ஷ்டம்.. எந்த பகுதியில் விழுந்தால் கவனமா இருக்கணும் தெரியுமா?

அருள் வாக்கு பலிக்குமா? 

இறை நாட்டமும், முறையான இறை வழிபாடு செய்பவர்களுக்கும், தியானம், தவம் இருக்கும் கட்டுக்கோப்பானவர்களுக்கு சாமி வந்து, அருள் வாக்கு சொன்னால் அது நிச்சயம் பலிக்கும். இப்படி முறையான பழக்க வழக்கம் இல்லாதவர்கள் வாக்கு பலிக்காது. அதாவது இறைவனின் அருள் இல்லாதவர்கள் சொல்வது பலிக்காது. 

ஜோதிட சாஸ்திரங்களின், நம் முன்னோரின் புண்ணியம், முற்பிறவி புண்ணியங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானம் உணர வைப்பது போல, இறை அருள் வாக்கு கூறுபவர்களும் தர்மத்தின் வழிபடி நடப்பவர்கள் சொல்லும் வார்த்தை தான் பலிக்கும். 

இதையும் படிங்க: மாசி மகம் 2023: எப்போது, யாருக்கு விரதமிருந்து வழிபட்டால் ஏழு ஜென்ம பாவமும் விலகும்.. விரத பலன்கள் முழுவிவரம்

Latest Videos

click me!