அதேபோன்று, தீபாவளி அன்று காலையில் முதல் செலவாக உப்பும், மஞ்சளும் புதிதாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றும் போது, பூஜை அறையில் இந்த மஞ்சளும் உப்பும் வைத்து இருக்க வேண்டும். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வது அனைவரும் அறிந்த ஒன்றே, மஞ்சளும் அதே போல தான் பல மங்களகரமான விஷயங்களுக்கு முதல் துவக்கமே இந்த மஞ்சள் தான். இந்த நாளில் வீட்டில் மங்கலமும் செல்வமும் நிறைந்து இருக்க இந்த இரண்டு பொருள்களை வாங்கி வைத்து வணங்கி கொள்ளுங்கள்.