இந்த இரண்டு பொருட்களை வைத்து..தந்தேரஸ் திருநாளில், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பளிச்சென்று சுத்தம் செய்யலாம்!

First Published Oct 23, 2022, 7:01 AM IST

Silver and Gold cleaning Tamil: தீபாவளி பண்டிகைக்கு நாம் அணியும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை எளிய முறையில் சுத்தம் செய்ய தேவையான உதவி குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் தீபாவளி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளை அலங்கரிப்பது , இனிப்பு பலகாரங்கள் செய்து, உற்றார் உறவினருக்கு கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதேபோன்று, தீபாவளிக்கு பாரம்பரியமாக உடை அணிவது, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போட்டு கொள்வதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள. 

மேலும் படிக்க..தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேரஸ் திருநாள் ..செல்வ வளம் பெருக, இந்த 5 பொருட்களை மறந்தும் கூட வாங்க வேண்டாம்..!

அத்தகைய தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்  நாம் போடும் போது பளிச்சென்று மின்ன வேண்டாமா..? அதற்காக, நம்மிடம் இருக்கும் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை ரசாயனம் எதுவும் இல்லாமல் காசு கொடுத்து கடைகளுக்கு சென்று பாலிஷ் போடாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிய முறையில் சுத்தம் செய்து விடலாம். 

வெள்ளி நகைகளை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, உங்கள் டூத் பேஸ்ட்டை கொஞ்சம் பயன்படுத்தி தேய்த்தால் போதும் நுண்ணிய துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகள் கூட நீங்கி பளபளவென்று புதிதாக வாங்கிய நகைகள் போல பளிச்சென்று மின்னும்.  
 

தங்க நகைகள் பளிச்சென்று பாலிஷ் போட்டது போல மாற கொஞ்சம் மஞ்சள் தூளுடன் சேர்த்து தண்ணீர் கலந்து கெட்டியாக கரைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு மணி நேரமாவது தங்க நகைகளை போட்டு நன்றாக ஊற விட்டு விடுங்கள். அதன் பின் எடுத்துவீட்டில் இருக்கும் டூத் பேஸ்ட்டை கொஞ்சம் பயன்படுத்தி பிரஷ் பயன்படுத்தி தேய்த்தால் போதும் நுண்ணிய துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகள் கூட நீங்கி பளபளவென்று புதிதாக வாங்கிய நகைகள் போல பளிச்சென்று மின்னும்.

வெள்ளி நகைகள் மீது தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அப்படியே கொஞ்சம் விபூதியை கைகளில் எடுத்து  லேசாக அழுத்தி தேய்த்தால் போதும். வெள்ளியில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். உடனே தண்ணீர் போட்டு கழுவாமல் ஈர துணி கொண்டு துடைத்து வையுங்கள். பிறகு ஒரு ஐந்து நிமிடம் கழித்து நல்ல தண்ணீரில் அலசினால் வெள்ளி நகைகள் பளிச்சென மின்னும், அதன் பிறகு நன்கு காய்ந்த துணியை கொண்டு உடனே துடைத்து எடுத்து விடுங்கள்.

உப்பு: 

தங்கம் மற்றும் வெள்ளிநகைகளை சுத்தம் செய்வது கூட உப்பை கூட பயன்படுத்தலாம். நகைகளை தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து ஊற விடவும். அதன் பிறகு, ஒருதுணியை பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்யவும். இது உங்கள் நகைகளில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதை எளிதாக்குகிறது.

அம்மோனியா: 

வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளை சுத்தம் செய்ய அம்மோனியா பயன்படுத்தப்படலாம். அவற்றை முதலில் அம்மோனியா தூள் கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு பிரஷ் மூலம் நகைகளைதேய்த்து எடுத்தால், அது உடனடியாக சுத்தமாகிவிடும். 


மேலும் படிக்க..தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேரஸ் திருநாள் ..செல்வ வளம் பெருக, இந்த 5 பொருட்களை மறந்தும் கூட வாங்க வேண்டாம்..!

click me!