இந்திய மக்களால் ஆண்டுதோறும், தீபாவளி திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஐப்பசி மாதத்தில் அக்டோபர் 24 ம் தேதி வரும் இந்த தீபாவளி பண்டிகையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நாளில் வீடுகள் மற்றும் பூஜை அறையை அலங்கரித்து பூஜை செய்தும், புத்தாடை அணிந்து, இனிப்பு பலகாரங்கள் செய்து, உற்றார் உறவினருக்கு கொடுத்தும் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
இந்த நாளில் எல்லோரும் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் வழிபடுவது அவசியம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்து பாரம்பரியத்தில், வீட்டில் விளக்கேற்றி ஒளி வீடு முழுவதும் பரவினால்தான் மகாலட்சுமி வீட்டுக்குள் நுழைவாள் என்பது நம்பிக்கை. அப்படி நாம் இந்த நாளில் விளக்கேற்றும் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன.
தீபாவளிக்கு விளக்கு ஏற்றும் போது செய்ய வேண்டியவை:
முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும். துளசி செடி உள்ள இடத்தில், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும்.
செல்வ வளம் பெருகி வீட்டில் மகிழ்ச்சி நிறைய விளக்கை கிழக்கு அல்லது வடகிழக்கு பார்த்தபடி விளக்கேற்றலாம். இது வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், விஷயங்களை அகற்றி, நலம், வளத்தை அதிகரிக்கச் செய்யும்.
தீபாவளிக்கு விளக்கு ஏற்றும் போது செய்யக் கூடாதவை:
தீபாவளிக்கு விளக்கு ஏற்றிய பிறகு, நாம் பயன்படுத்திய திரிகளை எல்லாம் ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்க வேண்டும்.
பிறகு சில நாட்கள் கழித்து நம்முடைய வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் எல்லோரையும் வரவழைத்து, கிழக்கு பார்த்து உட்கார சொல்லி சேகரித்த எல்லா திரியையும் போட்டு சுற்றி போட வேண்டும்.
பிறகு வாசலில் வைத்து எரித்து விட வேண்டும். இப்படி நம் செய்யும் போது, நம்மை பிடித்த பீடை, துஷ்ட சக்திகள் எதிர்மறை ஆற்றல்எல்லாமே தீயிலிருந்து எரிந்து போயிடும் .