Broom: தந்தேரஸ் திருநாளில் துடைப்பம் ஏன் வாங்குகிறோம்? அப்படி! வாங்கும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

First Published | Oct 22, 2022, 11:55 AM IST

Dhanteras Broom 2022: தீபாவளிக்கு ஒரு நாள் முன்னர், கொண்டாடப்படும்  தந்தேரஸ் பண்டிகை நாளில், துடைப்பம் வாங்குவது ஏன் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது என்பதை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், தனத்ரயோதசி என்று அழைக்கப்படும்  தந்தேரஸ்  பண்டிகை, தீபாவளிக்கு ஒரு நாள் முன்னர், அதாவது அக்டோபர் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில், இந்நாளில் செல்வம் மற்றும் செழுமையை பெருக்கும் குபேரர், லட்சுமி தேவி, விநாயகர், தன்வந்திரி ஆகியோரை வழிபடுகின்றனர்.

 மேலும் படிக்க...தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் பண்டிகை..செல்வ வளம் பெருக, இந்த 5 பொருட்களை மறந்தும் கூட வாங்க வேண்டாம்..!

இந்த நாளில், தங்கம் மற்றும் வெள்ளி, பாத்திரங்கள் வாங்குவதற்கு ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாளில் விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் பாத்திரங்களை வாங்குவது வீட்டிற்கு செல்வத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

Tap to resize

நகைகள் மற்றும் பாத்திரங்கள் தவிர, துடைப்பம் வாங்குவதும் தந்தேராஸ் அன்று ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. இந்த நாளில் துடைப்பம்  வாங்குவது ஏன் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது என்பதை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

 தந்தேரஸ் அன்று துடைப்பம் வாங்குவது, லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை வீட்டிற்கு கொண்டு வருவதால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும்,  தந்தேரஸ்  பண்டிகை அன்று வீட்டிற்கு ஒரு துடைப்பம் கொண்டு வருவதால் கடன்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. 

துடைப்பம் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க பயன்படுத்தப்படுகிறது. தூய்மை என்பது லட்சுமி தேவியை ஈர்க்கும் செயல் என்பதால் இந்த நாளில், துடைப்பம் வாங்குவது தந்தேராஸ் அன்று மங்களகரமானதாக கருதப்படுகிறது.

 மேலும் படிக்க...தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் பண்டிகை..செல்வ வளம் பெருக, இந்த 5 பொருட்களை மறந்தும் கூட வாங்க வேண்டாம்..!

அதேபோன்று துடைப்பம் வாங்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டியவை:

நீங்கள் வாங்கும் துடைப்பம் தடிமனாக இருந்தால், அது உங்கள் வீட்டில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

ஒரு போதும் நீங்கள், கடைக்கு சென்று பிளாஸ்டிக் அல்லது ரப்பர் துடைப்பங்களை வாங்க வேண்டாம். வீட்டில் மகிழ்ச்சி பெருக பிளாஸ்டிக் துடைப்பங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோன்று, நீங்கள் வாங்கும் துடைப்பம்  உடையாமல் இருப்பதைக் கவனிக்கவும். ஏனெனில், இவை வீட்டில் தீமை அல்லது அசுப சக்தியை கொடுப்பதாக உள்ளது.

மேலும், தேங்காய் நாரில் செய்யப்பட்ட துடைப்பம், வாங்குங்கள். ஏனெனில் இது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். மேலும், இது உங்களை அனைத்து தடைகளிலிருந்தும் பாதுகாப்பாக வைக்கும்.

Latest Videos

click me!