திருணத்திற்கு பிறகு பெண்கள் செய்யக்கூடாத முக்கிய இரண்டு தவறுகள்..இதனால், உண்டாகும் பாதிப்பு என்ன தெரியுமா..?

First Published | Oct 22, 2022, 9:56 AM IST

Pengal seiya kudathavai in tamil: திருமணமான பெண்கள் வீட்டில் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? இதனால் உண்டாகும் பாதிப்பை என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
 

இந்து பாரம்பரியத்தில், திருமணமான ஒவ்வொரு பெண்ணும் கழுத்தில் தாலி அணிவது, கால்களுக்கு மெட்டி அணிவது, கைகளுக்கு கண்ணாடி வளையல் போடுவது மற்றும் நெற்றியில் குங்கும் வைப்பது போன்றவை புகுந்த வீட்டில் செல்வ வளத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பது, நம்முடைய முன்னோர்கள் நமக்கு வழி வழியாய் நமக்கு சொல்லி தந்த மரபுகளில் ஒன்றாகும். 


ஏனெனில், திருமணத்திற்கு பிறகு பெண்கள் குடும்பத்தின் குல விளக்காகவும் திகழ்கிறார்கள். இருப்பினும், திருமணத்திற்கு பிறகு பெண்கள் சில விஷயங்களை செய்வது வீட்டில், வறுமை, ஆபத்து போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே,  திருமணமான பெண்கள் வீட்டில் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன? இதனால் உண்டாகும் பாதிப்பை என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
 

Tap to resize

திருமணமான பெண்கள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவது வழக்கம். இது கயிறு அல்லது சரடாக இருக்கும். இப்படி மாங்கல்யம் அணிந்திருக்கும் பெண்கள் அதில் ஊக்கு போன்ற இரும்பு பொருட்களை மாட்டி வைக்க கூடாது. திருமாங்கல்யத்தில் இரும்பு எப்பொழுதும் சேரக்கூடாது. 

ஒன்று மஞ்சள் கயிறாக இருக்க வேண்டும் அல்லது தங்க சரடாக இருக்க வேண்டும். அப்படி அல்லாமல் அதனுடன் இரும்பு சேரும் பொழுது அந்த பெண்ணிற்கு பொறுமை என்பது இருக்காது. குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை பெரிதாக்குவார்கள் எனவே மாங்கல்ய சரட்டில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

மேலும் படிக்க..உங்கள் காதில் முடி முளைத்திருந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? வாஸ்து,சாஸ்திரம் கூறுவது என்ன..?
 

பெண்ணுக்கு பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது மெட்டி. திருமணம் ஆனதும் கால் கட்டை  விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும். இல்லையென்றால், குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.  

அறிவியல் ரீதியாகவும், கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் அணிவது சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. எனவே, இம்மெட்டி நடக்கும் போது  அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகிறதாம்.

அதேபோன்று, மெட்டியை தேயாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில், இதுபோல மெட்டி தேய்ந்தாலும், குடும்பத்தில் மகிழ்ச்சி தேயும் என்கிற ஒரு சாஸ்திரம் உண்டு எனவே திருமணமான பெண்கள் மெட்டி அணிந்து இருந்தால் அது தேய்ந்து விடுவதற்கு முன்னரே புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள்.இதுவும் பெண்கள் செய்யக்கூடாத ஒரு விஷயம் ஆகும். 

 மேலும் படிக்க...தீபாவளி அன்று இந்த மந்திரங்களை சொல்லுங்கள்.. உங்கள் வாழ்க்கையில் இருள் நீங்கும்!

toe ring

அதேபோல தலையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அணிந்து கொண்டு தூங்க கூடாது. தூங்கும் பொழுது ஹேர் பின் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் தலையில் இருக்கக் கூடாது. அப்போது தான் உங்களுக்கு நிம்மதியான உறக்கம் வரும். மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை இதனால் தடுக்கப்படும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் தலையில் இருந்தால் மனதில் கவலைகள் மறையாது.

பெண்கள் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்து வேலை செய்யும் பொழுது தெற்கு திசையில் அமர்ந்து செய்யக்கூடாது. உங்களுக்கு பிடித்தமான வேறு திசைகளில், வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

Latest Videos

click me!