Sani Peyarchi: இன்னும் 24 மணி நேரத்தில் சனி பெயர்ச்சி..எந்த ராசிக்கு மகாலட்சுமியின் நேரடி அருள் கிடைக்கும்..!

First Published | Oct 22, 2022, 2:59 PM IST

Sani Peyarchi 2022 Palangal: இந்த 2022 ஆம் ஆண்டு தந்தேரஸ் பண்டிகை நாளில் சனி பகவான் பெயர்ச்சி நடைபெறும். இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல பலன்களை அடைவார்கள். 
 

தீபாவளிக்கு ஒரு நாள் முன்னர், அதாவது அக்டோபர் 23 ஆம் தேதி, தன்தேரஸ் நாளில் சனி பகவானின் நிலை மாறப்போகிறது. இந்த நாள் குபேரர், லட்சுமி தேவி, தன்வந்திரி ஆகியோரின் சிறப்பு ஆசீர்வாதம் கிடைக்க முக்கிய நாளாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் தனது ராசி அல்லது நிலையை மாற்றும்போது, அதன் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து ராசிகளிலும் காண முடியும்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்..ரிஷபம் ராசிக்கு தைரியம்..கன்னி ராசிக்கு சிக்கல் விலகும், உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

சனி பகவானின் அருள் ஒருவருக்கு இருந்தால், அவர் அந்த நபருக்கு அனைத்து இடத்திலும் அனுகூலமான பலன்களை அளிப்பார். அதே சமயம், அவரது விரோத பார்வை பட்டால் அந்த நபரின் வாழ்கை சுக்கு நூறாக உடைந்து போய் விடும்.  தற்போது அக்டோபர் 23 ஆம் தேதி, தன்தேரஸ் நாளில் மகரம் ராசியில் நிகழவிருக்கும் சனி பகவானின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் நல்ல பலன்களே கிடைக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

Tap to resize

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் இந்தநேரத்தில் நல்ல பலன்களை பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். வேலையில் அனைத்துத் துறைகளிலும் நன்மைகள் உண்டாகும்.  வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில், வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் பரிபூரண அருள் கிடைக்கும். இந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பளம் கூடும். வியாபாரிகள் பெரிய லாபம் பெறலாம். இந்த காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும்.  முதலீட்டில் பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகளும் கிடைக்கும்.

கடகம் 

 சனியின் அருளால் இந்த காலத்தில் பண வரவு அதிகரிக்கும். சனியின் தாக்கத்தால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த தொல்லைகள் அனைத்தும் நீங்கும். கௌரவம் உயரும்.  திருமணம் நிச்சயிக்கப்படலாம். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். 

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்..ரிஷபம் ராசிக்கு தைரியம்..கன்னி ராசிக்கு சிக்கல் விலகும், உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

மீனம்

சனி பகவான் பெயர்ச்சியால், மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல பலன்களைப் பெறலாம். இதுமட்டுமின்றி, இந்த நேரம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஏற்றதாக கூறப்படுகிறது. கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் பலனை இப்போது பெறலாம்.எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். தொழில்-வியாபாரத்தில் லாபமும், மரியாதையும் மதிப்பும் கூடும். 

Latest Videos

click me!