Spiritual: அம்பாள் அம்பிகை பசுவாக தவம் இருந்த இடம் தெரியுமா?! கால்நடைகளை குணப்படுத்தும் அதிசய அருகம்புல்.!

Published : Nov 25, 2025, 08:28 AM IST

மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கோழம்பியம், அம்பிகை பசுவாக சிவனை வழிபட்ட ஒரு புனித தலமாகும். இங்குள்ள சிவலிங்கத்தில் அம்பிகையின் குளம்படி பதிந்திருப்பதுடன், நோய்களைத் தீர்க்கும் சிறப்புமிக்க 'அறுகம்புல் அர்ச்சனை' வழிபாடும் பிரசித்தி பெற்றது.

PREV
16
அம்பிகை பசுரூபத்தில் சிவனை வழிபட்ட புனித தலம்

தமிழகத்தின்  சிறந்த ஆன்மிக  ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கோழம்பியம் ஆலயத்தில் அம்பிகை பசுரூபத்தில் சிவனை வழிபட்ட புனித தலம் என்பது யாருக்கும் தெரியாத ஆன்மிக ரகசியம். மயிலாடுதுறை–கும்பகோணம் சாலையில் ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலம், அருள்மிகு கோகர்ணேஸ்வரர், கொளம்பநாதர் என வழங்கப்படும் சிவபெருமானின் திருத்தலம். அம்பிகை உலகில் சிவபூஜையின் பெருமையை எடுத்துரைக்க பசுவாக அவதரித்து தவம் செய்த இடம் என்பதே இந்தத் தலத்தின் சிறப்பு.

26
லிங்கத்தில் பதிந்திருக்கும் அந்தக் குளம்படிச் சின்னம்

அன்னையின் தபஸால் மகிழ்ந்த சிவபெருமான் ஒருநாள் அவளுக்கு அருள் செய்யும் தருணம் வந்தது. அப்போதெல்லாம் அறியாமலே அம்பிகையின் குளம்படி சிவலிங்கத்தின் மேல் விழ, அந்த ஸ்பரிசத்தால் ஈசன் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அருள்புரிந்தார். இன்றும் லிங்கத்தில் பதிந்திருக்கும் அந்தக் குளம்படிச் சின்னத்தை பக்தர்கள் தரிசிக்க முடிவது இந்தத் தலத்தின் அதிசயமாகும். இதனால் இந்த ஊர் திருக்கொளம்பியம் என அழைக்கப்பட்டு, பின்னர் திருக்கோழம்பியம் என மருவியது.

36
செம்பியன் மாதேவி அருள் பெற்ற தலம்

இத்தலத்தில் உள்ள 'பிரம்ம தீர்த்தம்' பெரும் மகிமை வாய்ந்தது. பிரம்மதேவர் பெற்ற சாபம் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனைப் பணிந்து நீங்கியதாக ஐதிகம் சொல்கிறது. அதேபோல் செம்பியன் மாதேவி இங்கு மல்லிகையைச் சாட்சியாக வைத்து வழிபட்டு வெண்குஷ்ட நோய் நீங்கப் பெற்ற வரலாறும் உள்ளது. 

46
காவடி வழிபாடு இங்குள்ள மற்றொரு முக்கிய நிகழ்வு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற நாயன்மார்களால் பாடல் பெற்ற இந்தக் கோயில், 9 முக்கிய சிவத்தலங்களுடன் தொடர்புடையது. ஆடிக் கிருத்திகையில் நடைபெறும் காவடி வழிபாடு இங்குள்ள மற்றொரு முக்கிய நிகழ்வு. திருமணப் பாக்கியம், குழந்தைப்பேறு, வீட்டு வளம் என வேண்டிய வரம் வலைவந்திருப்பது பக்தர்கள் அனுபவப் பேச்சு.

56
அறுகம்புல் அர்ச்சனை வழிபாடு

ஆனால் இந்தத் தலத்தை தனித்துவப்படுத்துவது “அறுகம்புல் அர்ச்சனை”. நந்தியின் முன் ஒரு குவளைத் தண்ணீர், அறுகம்புல் வைத்து அர்ச்சனை செய்து வேண்டி, பின்னர் அதை பசுவுக்கு கொடுத்தால் எத்தகைய நோயும் நீங்கிவிடும் என்பது நூற்றாண்டுகளாக நிலைத்த நம்பிக்கை. 

66
பசுக்களின் பிணி தீர்க்கும் திவ்யத் தலம்

அருகிலுள்ள கிராம மக்கள் பசுக்களுக்கு நோய் ஏற்பட்டால் முதலில் திருக்கோழம்பியமே செல்வதற்குக் காரணமும் இதுவே. பசுக்களின் பிணி தீர்க்கும் திவ்யத் தலம் என்ற மகத்துவத்தால், திருக்கோழம்பியம் இன்றும் நம்பிக்கையின் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories