ஒருவரின் நெற்றியில் தெரியும் நரம்புகள், சுருக்கங்கள், நெற்றியின் அமைப்பு அவர்களின் குணநலன்களையும், பொருளாதார நிலையையும், எதிர்காலத்தையும் வெளிப்படுத்தும். மேடான நெற்றி லட்சுமி கடாட்சத்தையும், குறிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
முகமே ஒருவரை பற்றிய சுவரஸ்யங்களை வெளியே சொல்லும் என்றாலும். சிலரின் நெற்றியும், அதன் வடிவமும் அவர்களின் குணநலனை பிரதிபலிக்கும். சிலருக்கு முகத்தில் அதாவது நெற்றியில் நரம்புகள் தெளிவாகவும் புடைத்துக்கொண்டும் தெரியும் வகையில் இருக்கும். இப்படியான அன்பர்கள் எப்போ தும் எதைப்பற்றியாவது யோசித்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்தினைகள் இருக்கும் என்று சொல்கிறது அங்க லட்சண சாஸ்திரம். இதுவரை அதனை கவனிக்காதவர்கள் இனிமேல் கவனிக்கலாம்.
24
உங்கள் நெற்றியில் சுருக்கம் இருக்கா?
அழகான நெற்றியின் மேலும் காணப்படும் சுருக்கம் அவர்களின் கணத்தை சொல்லும். சுருக்கம் நிறைந்த நெற்றியைக் கொண்ட அன்பவர்கள், சஞ்சல சுபாவம், சிந்தனையும் கொண்டவர்களாக இருப்பார்கள். சந்தேகம் அவர்களுடைய இயல்பாக இருக்கும். எனினும் அவர்கள் சொந்தக் காலில் நிற்பார்கள் என்கிறது சாமூந்திரிக்கா லட்டசனம்.
34
மேடான நெற்றி இருக்கா? லட்சுமியின் அருள் கிட்டும்!
மேடான நெற்றியை கொண்டவர்களுக்கு கோடீஸ்வர யோகம் இருக்கும். நெற்றி சற்று மேடாக இருந்தால், லட்சுமி தேவியின் அருள் கிட்டும். இவர்கள் பிறந்த குடும்பமே வளம் செல்வ செழிப்பு மிக்கதாக இருக்கும். பணமும், பொருளும், செல்வமும் செல்வாக்கும் நிறைந்த சூழலில் சந்தோஷமாக அவர்கள் இருப்பார்கள். அதேபோல், விசாலமான நெற்றி இருப்பது ஞானத் தின் சின்னம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். கல்வி, கேள்வி, கலைகளில் சிறந்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு 45 வயதுக்கு மேல் நிலையான வாழ்வும் சந்தோஷமான சூழலும் அமையும்.
யாரெல்லாம் கடவுள் நம்பிக்கை மிகுந்தவர்கள் என ஈசியா தெரிஞ்சுக்கலாம்.முழு நிலவைப் போன்று உருண்டையான முக அமைப்பைப் பெற்றவர்கள், லட்சியவாதி கள் என்றால் அது மிகையல்ல. அவர்கள் எப்போதும் கடவுள் நம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பர். இவர்களிடம் உயர்ந்த மனோபாவமும், சிறந்த குணமும் அதிகமாக இருக்கும். இவர்களின் பேச்சு மற்றவர்களை வெகுவாக வசீகரிக்கும்.