Spiritual: திருக்கார்த்திகையில் ஏன் அகல்விளக்கு ஏற்ற வேண்டும்?! வரலாறுடன் கூடிய ஆன்மிக விளக்கம் இதுதான்.!

Published : Dec 01, 2025, 10:39 AM IST

திருக்கார்த்திகை தீபத் திருநாள் சங்க இலக்கிய காலம் தொட்டே வழக்கில் உள்ளது. கடலுக்குச் சென்ற கணவருக்காக பெண்கள் ஏற்றிய வழிகாட்டி விளக்கு, பௌத்தர்கள் கண்டுபிடித்த ஆமணக்கு எண்ணெய் தீபம் என வளர்ந்து, திருவண்ணாமலை மகாதீபமாக உருப்பெற்றது.

PREV
16
சங்க இலக்கிய ஆதாரம்

தமிழர்களின் நாட்டுப்புற வழக்கங்களில் சிறப்பு இடம்பிடித்திருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள், நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பமான ஒரு மரபு. இந்த நாளில் தீபம் ஏற்றுவது வெறும் ஆன்மீக பழக்கம் மட்டும் அல்ல, வாழ்க்கையை ஒளியால் நிரப்பிய நம்பிக்கைச்சின்னம்.

பழைய சங்க இலக்கியத்தில் முதுகூற்றனார் குறிப்பிடும் பாடலில், தீபம் ஏற்றிய மரபு அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலுக்கு பயணமான கணவர்களை காத்திருந்த பெண்கள், இருள் நேரத்தில் அவர்கள் கரையை அடைய வழிகாட்டும் பொருட்டு மலை உச்சிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம், தீபம் என்பது வழிகாட்டும் ஒளி எனும் கருத்து ஆரம்பித்தது.

26
பனிக்காலத்துடன் தொடர்பு

ஆண்டின் குளிர் காலமான கார்த்திகை மாதத்தில் அதிக இருளும் மூட்டமும் காணப்படும். எங்கும் தெரியும் ஒளி இல்லாத சூழலில், விளக்குகள் ஏற்றி கிராமத்திற்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் இந்த மரபு உருவானது.

பவுத்த ஞானிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு

முன்பொரு காலத்தில், மலாடபுரம் எனப்படும் பகுதியில் வாழ்ந்த புத்த மதத்தினர், ஆமணக்கு விதையிலிருந்து எண்ணெயை எடுத்து, மண் பானைகளில் பிரகாசமான தீபங்களை ஏற்றினர். இதனால்

ஒளி அதிக அளவில் கிடைத்தது

பூச்சிகள் அருகில் வரவில்லை

தீபம் நீண்ட நேரம் எரிந்தது

முதல் நாள் வீட்டு வாசலில், மறுநாள் முற்றத்தில், பின்னர் வீட்டினுள்ளும் தீபம் வைத்தனர். இதனால் தீபமே ஒரு வீட்டின் பாதுகாப்பை சுட்டிக்காட்டும் சின்னமாக மாறியது.

36
"குன்றிலிட்ட விளக்கு" மரபு

ஒரே வீடல்லாமல் முழு ஊர் ஒளிர வேண்டும் என்ற எண்ணத்தில், மக்கள் உயரமான இடங்களில், பெரிய பள்ளம் தோண்டி, அதில் எண்ணெய் நிரப்பி, நீளமான திரியை வைத்து ஜெகஜோதியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்தனர். அந்த உயர்ந்த இடமே இன்று நாம் வழிபடும் திருவண்ணாமலை. அங்கிருந்து ஏற்பட்ட தீப வழிபாடு பின்னர் மகாதீபம் என அழைக்கப்பட்டது. “குன்றிலிட்ட விளக்கு” என்ற சொற்றொடரே இதன் ஆதாரம்.

46
ஒளியின் அர்த்தம் மாறவில்லை

காலம் மாறினாலும், ஒளியின் அர்த்தம் மாறவில்லை. திருக்கார்த்திகையில் ஏற்றப்படும் அந்த அகல்விளக்கு, வீட்டு வாசலில் மட்டும் ஒளிரும் தீபம் அல்ல, மனதில் இருக்கும் இருளையும் கவலையையும் அகற்றி நம்பிக்கையை ஏற்றும் சின்னம். சங்க இலக்கியத்திலிருந்து பௌத்த ஞானிகளின் அறிவு வரை, திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபம் வரை இந்த மரபு பல தலைமுறைகளைத் தாண்டி வந்து சேர்கிறது. 

56
தீபம் ஏற்றுவது வரலாறின் தொடர்ச்சி

ஆகவே, திருக்கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்றுவது ஒரு பழக்கமோ சடங்கோ அல்ல,மனிதன் வாழ்க்கையை வெளிச்சத்துக்குக் கொண்டுச் சென்ற வரலாறின் தொடர்ச்சிதான். ஒளியை போற்றி ஏற்றப்படும் அந்த ஒரு தீபமே, ஆயிரம் ஆண்டுகளாக நம் கலாச்சாரத்தின் உயிராக திகழ்கிறது.

66
திருக்கார்த்திகை மற்றும் சிவபெருமானின் தொடர்பு

புராணக் கதைகளில், கார்த்திகை மாதம் சிவனின் தீப ஸ்வரூபத்தை கொண்டு முடிவடைந்ததாக கூறப்படுகிறது. மலை மீது ஏற்றப்படும் ஒளி, சிவன் அருளின் வடிவமாக கருதப்படுகிறது. அதனால் பெரிய மலை, உயரமான கோபுரம், கோயில் தூபி போன்ற இடங்களில் தீபம் ஏற்றும் மரபு உள்ளது.

கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்

பழமொழிகளும் நம்பிக்கைகளும் சொல்லுவது

  • வீட்டில் அமைதியும் வளமும் பிறக்கும்
  • துன்பம், கவலை, எதிர்மறை மனநிலையில் இருந்து குடும்பம் விடுபடும்
  • நல்ல ஆற்றல், ஆரோக்கியம், ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்
Read more Photos on
click me!

Recommended Stories