நம் முன்னோர்கள் பின்பற்றிய தூப வழிபாடு, வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை அகற்றி, நேர்மறை ஆற்றலை நிரப்புகிறது. தினமும் சாம்பிராணி அல்லது குங்கிலியம் தூபம் இடுவதால் குடும்ப சண்டைகள், மனஅழுத்தம் குறைந்து, வீட்டில் அமைதியும் வளமும் நிலைக்கும்.
வீட்டில் அமைதி நிலைக்க வேண்டுமா? குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, மனஅழுத்தம், குழப்பம், தொடர்ந்து வரும் நோய் போன்றன விலக வேண்டுமா? அப்படியெனில், நம் முன்னோர்கள் தலைமுறைதோறும் செய்து வந்த ஒரு எளிய ஆன்மீக வழிப்பாட்டை பின்பற்றினாலே போதும் — அதுதான் தூப வழிபாடு.
28
வீட்டைச் சுத்தப்படுத்தும் சக்தி கொண்டவை
தூபத்தின் வாசனையும் புகையும் வீட்டைச் சுத்தப்படுத்தும் சக்தி கொண்டவை என்று சாஸ்திரங்களும் ஆகமங்களும் கூறுகின்றன. அது சூழலை புத்துணர்ச்சியுடன் மாற்றி, மனதில் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். எதிர்மறை அலைகள் கூட அருகில் வராமல் தடுக்க, வீட்டில் தினமும் தூபம் இடுவது மிக முக்கியம் என பெரியோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
38
தூபம் யமபயம் போக்கும்
புராணங்களில், ‘தூபம் யமபயம் போக்கும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து வீட்டில் சண்டை, சச்சரவு நிலவி வந்தாலோ, யாருக்கோ ஒரு உடல்நிலை சரியாகாமல் இருந்தாலோ, தூபம் அவற்றை தணிக்க வல்லது. காரணம்—அதன் வாசனை மனதை அமைதிப்படுத்துகின்றது; புகை சூழலை நேர்மறை ஆற்றலால் நிரப்புகின்றது.
சிவாலயங்களில் கூட தீபாராதனைக்கு முன் தூபம் இடுவது சக்தி வாய்ந்த சடங்காக கருதப்படுகிறது. “ஓம் ஹாம் சங்கராய நம:” என்ற மந்திரத்துடன் தூபம் இடும்போது, அந்த இடத்தில் அகம்-புறம் இரண்டிலும் நேர்மறை அலைகள் உருவாகும்.
58
தூப வழிபாடு மன நெருக்கடியை அகற்றும்
பெரியபுராணத்தில் வரும் குங்கிலியக் கலய நாயனார் கதையே இதற்குச் சாட்சி. வறுமையிலும் தளராமல் தூபத்தோடு சேவை செய்த அவரை இறைவன் செல்வநிறைவுடன் வாழச் செய்தான். இதனால், தூப வழிபாடு மன நெருக்கடியையும், பாவபரப்பையும் அகற்றும் என்று புரிதல் நிலைத்தது.
68
தூய்மையும் அமைதியும் தரும்
தூபத்தில் பயன்படுத்தப்படும் அகில், குங்கிலியம், சாம்பிராணி போன்றவை இயற்கை மருத்துவ ரீதியிலும் பயனுள்ளதாகவே கருதப்படுகின்றன. வீட்டில் வரும் கிருமிகளை தடுத்து சூழலுக்கு தூய்மையும் அமைதியும் தருவது அவைகளின் தன்மை.
78
மனமும் உடலும் அமைதி அடையும்
முன்பு பெண்கள் தலைக்குக் குளித்த பின் தூபமாட்டுவது ஒரு இயல்பு வழக்கம். இந்த எளிய செயலால் மனமும் உடலும் சாந்தமடைந்து, எதிர்மறை சக்திகள் மனத்தளர்ச்சி ஏற்படுத்தாமல் பாதுகாக்கப்படும்.
88
எதிர்மறை சக்திகள் எரிந்து ஒழியும்
தினமும் வீட்டில் ஒரு முறை குங்கிலியம் அல்லது சாம்பிராணி தூபம் இடுங்கள். சண்டை, மனஅழுத்தம், குழப்பம் தானாகவே குறையும். வீட்டில் அமைதி, நேர்மறை, வளம், நிம்மதி நிலைக்கத் துவங்கும். நினைவில் வையுங்கள்— “தூபம் எரியும் இடத்தில், எதிர்மறை சக்திகள் எரிந்து ஒழியும்!