சந்திராஷ்டமம் என்பது பலரும் நினைப்பது போல் முழுவதும் கெட்ட நாள் அல்ல, அது நம்மை எச்சரித்து பாதுகாக்க வரும் ஒரு நாள். சில ராசிகள், நட்சத்திரங்களுக்கு இது நன்மைகளையும் தரும். சரியான பரிகாரங்களால் இந்த நாளை ஒரு வெற்றி நாளாக மாற்ற முடியும்.
பெரும்பாலும் மக்கள் சந்திராஷ்டமம் என்றாலே பயத்தில் இருப்பார்கள். “இது கெடுதலா? சங்கடமா?” என்று நினைப்பார்கள். ஆனால் இது முழுவதும் கெடுக்க வந்ததல்ல. இந்த நாள் நம்மை எச்சரித்து நம்மை பாதுகாக்க வருகிறது. ஜோதிடத்தில் சந்திரன் என்பது மனதின் அதிபதி. மன அமைதி, முடிவெடுக்கும் சக்தி, தெளிவு – எல்லாம் சந்திரனால் தான். அந்த சந்திரன் எட்டாவது பாவத்தில் செல்லும் போதே சந்திராஷ்டமம்.
26
பலர் அறியாத உண்மை என்ன தெரியுமா?
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
ஒருவர் பிறந்த நட்சத்திரத்தின் ராசிக்கு 8-ஆம் வீட்டில் இருக்கும் ராசி சந்திராஷ்டமம். இந்த நாட்களில் மனம் சஞ்சலப்படலாம், கவலை, கோபம், மன வேதனை அதிகரிக்கலாம் என்பதால் பெரிய முடிவுகளும், புகார்-புதிய திட்டங்களும் நிறுத்தி வைக்க சொல்லப்படுகிறது. ஆனால் பலர் அறியாத உண்மை என்ன தெரியுமா?
36
சந்திராஷ்டமம் கெடுதலோடு நன்மையும் கொண்டது!
சில ராசி, சில நட்சத்திரங்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களையும் தரும். கடகம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் பிரச்சfனை தராது. மேலும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இது லக்கி டே!
சந்திராஷ்டமம் தினத்தில் ஓய்வு வேண்டியிருப்பது உண்மை. ஆனால் இது பயப்படும் நாள் அல்ல. சரியாக பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கை சீராகும் நாளாக மாறி விடும்.
56
இந்த நாளில் செய்யவேண்டிய சக்திவாய்ந்த பரிகாரங்கள்
காலையில் குலதெய்வத்தை, முன்னோர்களை, இஷ்டதெய்வத்தை நினைவில் கொண்டு துதிக்கவும்.
வீட்டில் இருக்கும் தாய்க்கு அல்லது பெண்களுக்கு மரியாதை செலுத்துங்கள். சந்திரன் மாத்ருகாரகன் என்பதால் பெண்களுக்கு நன்மை செய்தால் சந்திரன் வலுவாகும்.
அம்மவாசை மனபூர்வமான எண்ணங்களைக் கொண்டே ஒரு நாளை அமைதியாகத்தான் பயன்படுத்துங்கள்.
தண்ணீர் தானம், பால் அல்லது தயிர் தரும் தானங்கள் மிகவும் நன்மை தரும்.
அம்மன் ஆலயத்திற்கு சென்று பால்/சுண்ணாம்பு கலசம் அல்லது விளக்கு பூஜை செய்யலாம்.
மனதை காயப்படுத்தும் செயல்களை, பேச்சுகளை தவிர்த்தால் நாள் மிகவும் நலமாக முடியும்.
இந்த நாளில் செய்ய வேண்டாதவை
பெரிய முடிவுகள்
ஆவேசமாக செயல்படுவது
குடும்பத்துடன் வாக்குவாதம்
66
சந்திராஷ்டமம் வந்தால் பயப்பட வேண்டாம்!
இது உங்கள் மனதை சோதிக்கும் நாள். இந்த நாள் நம்மை தாழ்த்த வரவில்லை. நம்மை பாதுகாக்க வந்திருக்கும் ஆன்மிக சிக்னல். சந்திராஷ்டமம் நேரத்தில் தெய்வ நம்பிக்கை, பிரார்த்தனை, அமைதியான செயல்கள் செய்தால் பிரச்சனை இல்லாமல் எல்லாம் வெற்றியாக முடியும். அதனால்தான் இந்த நாளை முனிவர்கள், ஜோதிடர்கள் “சஷ்டாங்க வெற்றி நாளாக மாற்றலாம்” என்று சொல்கிறார்கள். சந்திராஷ்டமம் பயமில்லை, தெய்வ சக்தியுடன் இது ஒரு வெற்றிநாள்