Spiritual: கடன் உங்க காலையே சுத்தி, சுத்தி வருதா? தீராத கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ரகசிய மலர்.! ஒரே நாளில் தீர்வு கிடைக்குமாம்!

Published : Nov 28, 2025, 11:10 AM IST

பலரும் குப்பைச்செடி என ஒதுக்கும் ஊமத்தை மலர், உண்மையில் சிவனுக்கு பிரியமான, பரிகார சக்தி நிறைந்த அதிசய மலராகும். கிரக தோஷங்கள், கடன் பிரச்சினைகள், எதிர்மறை சக்திகளை நீக்க இந்த மலர் தெய்வீக வழிபாட்டிலும், தாந்திரீக பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

PREV
16
பரிகார சக்தியை தாங்கிய அதிசய மலர்

தெய்வ வழிபாட்டில் மலர்களுக்கு தனி இடம் உண்டு. அதில் எல்லோரும் குப்பைச்செடி என்று நினைத்து அன்றாடம் ஒதுக்கிவிடும் ஊமத்தை மலர், உண்மையில் பரிகார சக்தியை தாங்கிய அதிசய மலர். சிவபெருமானுக்கு மிகப் பிரியமான மலர்களில் இம்மலர் ஒன்றாகும். தேவாரப் புனிதர்களும் இந்த மலரைப் புகழ்ந்துள்ளனர். சைவ மரபு, தந்திர பூஜை, தெய்வ வழிபாடு இம்மூன்றிலும் ஊமத்தைக்கு மறைமானியம் உண்டு.

26
ஊமத்தை என்பது சாதாரண செடி அல்ல

இதன் சிறப்பு என்ன? ஊமத்தை என்பது சாதாரண செடி அல்ல. இயற்கையால் வந்துள்ள அற்புத மருத்துவக் குணங்கள் நிறைந்த செடி. இதிலிருந்து தயாரிக்கும் “உன்மத்த எண்ணெய்” தோல் சம்பந்தமான பிரச்சனைகள், மூட்டுவலி, வாதம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிலும் முக்கியமாக, அருளைப் பெறச் செய்யும் பூஜைச் செடியும் கூட.

36
கிரக தோஷ நிவாரணம் கிடைக்கும்

புரட்டாசி மாதத்தில் சிவபெருமானுக்கு ஊமத்தை மலரைச் சாற்றுவது மிகப் பெரிய புண்ணியம் என நம்பப்படுகிறது. ஒரு ஊமத்த மலரை சிவனுக்கு நிவேதனம் செய்தால், அருள், புண்ணியம், கிரக தோஷ நிவாரணம் கிடைக்கும் என்று திருவசனங்கள் கூறுகின்றன.

46
ஊமத்தம் பூ சிறப்புகள்

குறிப்பாக கடன் பிரச்சனைகள், எதிர்மறை சக்திகள், திருஷ்டி, மன உளைச்சல் நீங்குவதற்காக செவ்வாய்க்கிழமைகளில் விநாயகருக்கு உன்மத்த இலைகளைக் கொடுத்து அர்ச்சனை செய்யலாம். இதேபோல் குளக்கரை விநாயகரிடம் அல்லது கவனிப்பரற்ற ஆலயங்களில், ஊமத்த எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் வாழ்க்கையில் மெதுவாக தடைகள் விலகத் தொடங்கும்.

56
லட்சுமி, விஷ்ணு பயன்படுத்தக்கூடாது

இத்தாவரம் தாந்திரீக பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் வைத்துக் கொள்வது வழக்கமில்லை. காரணம் – இது சிவபெருமானுக்குரிய தெய்வீக மலர். லட்சுமி, விஷ்ணு பூஜைகளில் இதைப் பயன்படுத்தக்கூடாது.

66
பயம், பகை, சூனியம் போன்றவை அகலும்

கரு ஊமத்தை மலரை பைரவருக்கு நிவேதனம் செய்தால் திருஷ்டி, பயம், பகை, சூனியம் போன்றவை அகலும் என்ற நம்பிக்கை உள்ளது. ஊமத்தை மலர் நமக்குச் சொல்ல வருவது ஒரே ஒன்று: அளவோடு பயன்படுத்தினால் அருளும், பாதுகாப்பும் நிச்சயம்!

Read more Photos on
click me!

Recommended Stories