Chanakya Niti: உங்கள் வீட்டில் இந்த 6 அறிகுறிகள் தெரிந்தால் தரித்திரம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!

Published : Nov 27, 2025, 02:52 PM IST

signs before financial loss: சாணக்கியர் நீதிபடி ஒருவருக்கு பண இழப்பு அல்லது வறுமை ஏற்படுவதற்கு முன்பு அவரது வாழ்க்கையிலும், வீட்டிலும் சில அறிகுறிகள் தென்படும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
நிதி இழப்பு ஏற்படுவதற்கு முன் அறிகுறிகள்

இந்திய வரலாற்றில் சாணக்கியர் மிகப்பெரிய தத்துவஞானியாகவும், அரசியல் அறிஞராகவும் திகழ்ந்தவர். அவர் தனது ‘நீதி சாஸ்திரம்’ என்னும் நூலில் வாழ்க்கைக்குத் தேவையான பல நீதிகள் மற்றும் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அந்த வகையில் சாணக்கியர் ஒருவரின் வாழ்க்கையில் நிதி இழப்புக்கள் அல்லது வறுமை ஏற்படுவதற்கு முன்னர் வீட்டில் சில அறிகுறிகள் தென்படும் என்று கூறியிருக்கிறார். அந்த அறிகுறிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
துளசி செடி வாடுவது

வீட்டில் உள்ள துளசி செடிகள் திடீரென்று வாடத்தொடங்குவது அல்லது தொடர்ந்து பலவீனமாவது வரவிருக்கும் நிதி சிக்கல்களில் முக்கிய சகுனமாக கருதப்படுகிறது. துளசி செடி என்பது மகாலட்சுமியின் அம்சமாகவும், நேர்மறை ஆற்றல் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. துளசி செடி வாடுவது என்பது செல்வத்தில் நிலைத்தன்மை குறையும் அல்லது பண இழப்பு ஏற்படும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

36
குடும்பத்தில் தேவையில்லாத சண்டை

எந்த காரணமும் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களிடையே அடிக்கடி சண்டை வருவது, வாக்குவாதங்கள் எழுவது, மன அழுத்தங்கள் அதிகரிப்பது ஆகியவை அசுபமான அறிகுறியாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் வீட்டில் மகிழ்ச்சி, முன்னேற்றம் நிலைக்காது. தொடர்ச்சியான குழப்பம் மற்றும் அமைதியின்மை காரணமாக நிதிநிலைமை மோசமான சூழ்நிலைக்கு செல்லும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.

46
வீட்டில் பூஜை செய்யாமலிருப்பது

வீட்டில் கடவுள் பக்தி, பூஜை மற்றும் வழிபாடுகள் ஆகியவை குறையத் தொடங்கினால் அது துன்பங்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் அதிகரிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்யப்படவில்லை என்றால் நிறைவான வருமானம் வந்தாலும் அவர்கள் வீட்டில் ஒருபோதும் பணம் நிலைக்காது என்றும், ஆன்மீகத்தில் விலகி இருப்பது பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

56
பெண்களுக்கு நடக்கும் அவமரியாதை

ஒரு வீட்டில் பெண்களும், மூத்தவர்களும் மதிக்கப்படாமல் இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்க மாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார். பெண்களை அவமதிப்பது என்பது வந்த செல்வத்தை இழப்பதற்கு சமமாகும் என்று சாணக்கியர் கூறுகிறார். வீட்டில் உள்ள பெண்களையும், பெரியவர்களையும் மதித்து நடத்துவது என்பது பொருளாதார நிலையை மேம்படுத்தும் என்றும், லட்சுமிதேவி வீட்டில் நிரந்தரமாக தங்க வழி வகுக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.

66
ஆடம்பரச் செலவுகள்

மற்றவர்களை விட தங்கள் மேலானவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பது, கௌரவத்திற்காகவும், அதிக அந்தஸ்து உள்ளவர்களிடம் பழகுவதற்காகவும் சம்பாதிக்கும் பணத்தை யோசிக்காமல் செலவழிக்கத் தொடங்குவது நிதி நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்றும், இறுதியில் சம்பாதித்த பணம் அனைத்தையும் இழக்க நேரிடும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.

இந்த அறிகுறிகள் தோன்றும் பொழுது விழிப்புடன் இருந்து, செலவுகளை கட்டுப்படுத்துவது, புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது மற்றும் கடன்களை தவிர்ப்பது போன்ற சாணக்கியரின் நிதி ஆலோசனைகளை பின்பற்றினால் பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories