தை 2025: திருமணங்கள் நடத்துவதற்கான சுப முகூர்த்த நாட்கள் பட்டியல்!

First Published | Jan 23, 2025, 11:14 AM IST

Marriage Muhurtham Dates Thai Month 2025 : இந்த ஆண்டு தை மாதத்தில் திருமணங்கள் செய்வதற்கு ஏற்ற சுப முகூர்த்த நாட்களை குறித்து இங்கு பார்க்கலாம்.

Marriage Muhurtham Dates Thai Month 2025 In Tamil

இந்து மதத்தில் எந்த ஒரு காரியங்களை செய்தாலும் அல்லது ஏதேனும் புதிய விஷயங்களை தொடங்கினாலும் அதற்காக நல்ல நாள் பார்த்து சுபமுகூர்த்த நாளில் மட்டுமே செய்வார்கள். அப்போதுதான்  அந்த காரியம் சுகமாக இருப்பது மட்டுமின்றி மகிழ்ச்சியாகவும், வெற்றியாகவும் இருக்கும் என்று நம்பிக்கை. சுபமுகூர்த்தம் என்பது நல்ல காரியங்களை செய்வதற்கு ஏற்ற நாளாகும். மாதத்தின் எல்லா நாட்களும் நல்ல நாட்களாக இருந்தாலும், முகூர்த்த நாள் என்பது ஒரு மாதத்தில் அதுவும் ஒரு சில நாட்களில் மட்டுமே வரும்.

Marriage Muhurtham Dates Thai Month 2025 In Tamil

அந்தவகையில் தற்போது மார்கழி முடிந்து தை பிறந்தாச்சு. இந்த தை மாதத்தில் வாகனம் வாங்குவது, வீடு கிரகப்பிரவேசம் செய்வது, திருமண நிச்சயதார்த்தம், திருமணம் முகூர்த்தம் செய்வது போன்ற சுப காரியங்கள் செய்வதற்கு உகந்த மாதமாகும். தை மாதத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கும். 

இதையும் படிங்க:  உங்க கிச்சன்ல 'எந்த' கலர் பெயிண்ட்? கண்டிப்பா 'செல்வம்' குவியும்!!


Marriage Muhurtham Dates Thai Month 2025 In Tamil

அதிலும் குறிப்பாக சிலர் தை மாதம் முகூர்த்த தேதி சுப முகூர்த்த நாள் இருந்தால் போதும் அவர்கள் அனைத்து சுப காரியங்களையும் செய்வார்கள். இன்னும் சில தை மாதத்தில் முகூர்த்த தேதி நாளாக இருந்தால் கூட வளர்பிறை முகூர்த்தமாக இருந்தால் மட்டுமே சுப காரியங்களை செய்வார்கள். தேய்பிறை முகூர்த்த நாளில் செய்ய விரும்பமாட்டார்கள். அதிலும் குறிப்பாக திருமணங்களை ஒருபோதும் வைக்க மாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில், இந்த 2025 ஆம் ஆண்டில் திருமணங்கள் செய்வதற்கான சுப முகூர்த்த நாட்கள் என்னென்ன என்பதை பற்றி இந்தப் பதியில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  தலையணைக்கு கீழே இந்த '7' பொருள் வெச்சு தூங்குங்க.. அதிஷ்டம் பெருகும்!

Marriage Muhurtham Dates Thai Month 2025 In Tamil

தை 2025 சுப முகூர்த்த நாட்கள்:

1. 19 ஜனவரி 2025 (தை 06) - ஞாயிற்றுக்கிழமை (தேய்பிறை)

2. 20 ஜனவரி 2025 (தை 07) - திங்கள்கிழமை (தேய்பிறை)

3. 31 ஜனவரி 2025 (தை 18) - வெள்ளிக்கிழமை (வளர்பிறை)

4. 02 பிப்ரவரி 2025 (தை 20) - ஞாயிற்றுக்கிழமை (வளர்பிறை)

5. 03 பிப்ரவரி 2025 (தை 21) - திங்கள்கிழமை (வளர்பிறை)

6. 10 பிப்ரவரி 2025 (தை 28) - திங்கள்கிழமை (வளர்பிறை)

Latest Videos

click me!