Things Under Pillow Vastu : வாஸ்து படி இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் சில பொருட்களை வைத்து தூங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். அது என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்து மதத்தில் ஒவ்வொரு காரியங்களையும் வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றி தான் செய்வார்கள். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வைக்கப்படும் அனைத்தும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில், நாம் இரவு தூங்கும் போது கெட்ட கனவு வரக்கூடாது அல்லது கனவில் ஏதாவது கண்டால் பயப்படக்கூடாது என்பதற்காக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தூங்கும் போது அருகில் துடைப்பத்தை வைக்க சொல்லுவார்கள். இதனால் பயம் குறைந்து நிம்மதியாக தூங்க முடியும்.
25
things under pillow vastu tips in tamil
அதுபோல்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு பெருக மற்றும் அதிர்ஷ்டம் சில பொருட்களை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. அது எந்தெந்த பொருட்கள் என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் மயிலிறகு வைத்து தூங்கினால் நேர்மறை ஆற்றல் வீட்டில் நிறைந்திருக்கும் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும். இது தவிர, இது மன அமைதி மற்றும் நல்வாழ்வை கொடுக்கும்.
நாணயம்:
வாஸ்து படி தூங்கும் போது தலையணைக்கு அடியில் ஏதாவது ஒரு நாணயத்தை வைத்து தூங்கினால் உங்களது நிதிநிலை மேம்படும். முக்கியமாக எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
வாஸ்துபடி ஏலக்காயை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் மன அழுத்தம் நீங்கி ,நிம்மதியாக தூங்குவீர்கள்.
கத்தி:
நீங்கள் இரவு தூங்கும் போது கெட்ட கனவு அதிகமாக வருகிறது என்றால் வாஸ்துபடி தலையணக்க அடியில் கத்தி வைத்து தூங்கினால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியும். ஆனால் கத்தியை ஒரு துணியில் சுற்றி வைத்து தூங்க மறக்காதீர்கள்.
வாசனை பூக்கள்:
வாஸ்துபடி தலையணுக்கு அடியில் வாசனை பூக்களை வைத்து தூங்கினால் இனிமையான சூழலால் மன நிம்மதியாக இருக்கும் மற்றும் சீக்கிரமாகவே தூங்கி விடுவீர்கள்.
55
things under pillow vastu tips in tamil
வெந்தயம்:
வெந்தயம் வாஸ்து சாஸ்திரங்களை சரி செய்ய உதவுகிறது. எனவே நீங்கள் இரவு தூங்கும் முன் வெந்தயத்தை ஒரு துணியில் சுற்றி தலையணுக்கு அடியில் வைத்து தூங்கினால் விடுபடுவீர்கள்.
பகவத் கீதை:
வீட்டில் நேர்மறை ஆற்றல் வர தூங்கும் போது தலையணைக்கு அடியில் பகவத் கீதை வைத்து தூங்கலாம். முக்கியமாக பகவத் கீதையை கையில் வைத்து படிக்கவே கூடாது. மேலும் வேறு ஏதேனும் புத்தகத்திற்கு அருகில் வைக்கவும் கூடாது
இவற்றையும் வைக்கலாம் : மஞ்சள் தூள், இரும்பு சாவி, சூடம், துளசி இலை மற்றும் கிராம்பு.